• Nov 28 2024

இலங்கையில் கடந்த 10 மாதங்களில் இலஞ்சம் வாங்கிய 73 பேர் கைது!

Chithra / Nov 24th 2024, 9:03 am
image


இலங்கையில் கடந்த 10 மாதங்களில் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் 73 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு தலைமை பொலிஸ் ஆய்வாளர், இரண்டு பொலிஸ் ஆய்வாளர்கள், 

ஒரு சப்-இன்ஸ்பெக்டர், எட்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஒன்பது சார்ஜென்ட்கள் உட்பட 21 பொலிஸ் அதிகாரிகள் அடங்குகின்றனர்.

மேலும், 24 பொதுமக்களும், மூன்று கிராம உத்தியோகத்தர்களும், பாடசாலை அதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இலஞ்சம் வாங்கியதற்காகவும், இலஞ்சம் வழங்கியதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்  என குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த 10 மாதங்களில் இலஞ்சம் வாங்கிய 73 பேர் கைது இலங்கையில் கடந்த 10 மாதங்களில் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் 73 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்டவர்களில் ஒரு தலைமை பொலிஸ் ஆய்வாளர், இரண்டு பொலிஸ் ஆய்வாளர்கள், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், எட்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஒன்பது சார்ஜென்ட்கள் உட்பட 21 பொலிஸ் அதிகாரிகள் அடங்குகின்றனர்.மேலும், 24 பொதுமக்களும், மூன்று கிராம உத்தியோகத்தர்களும், பாடசாலை அதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இலஞ்சம் வாங்கியதற்காகவும், இலஞ்சம் வழங்கியதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்  என குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement