• May 07 2024

ரஜினி பிறந்தநாளுக்கு 73 கிலோவில் கேக்!

crownson / Dec 12th 2022, 8:06 am
image

Advertisement

ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி 73 கிலோ அளவிலான கேக்கை உருவாக்கி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை இன்று (12.12.2022)கொண்டாடுகிறார்.

இதையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகள், அன்னதானம், கோவில் மத வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் உள்ளிட்டவை ரசிகர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ரஜினி ரசிகர்கள் இன்று 73 கிலோ அளவிலான கேக்கை வெட்டி ரஜினி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்கள்.

இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்லும் வகையில் பல்வேறு பிறந்தநாள் ஹேஷ் டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

ரஜினி பிறந்தநாளுக்கு 73 கிலோவில் கேக் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி 73 கிலோ அளவிலான கேக்கை உருவாக்கி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை இன்று (12.12.2022)கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகள், அன்னதானம், கோவில் மத வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் உள்ளிட்டவை ரசிகர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் ரஜினி ரசிகர்கள் இன்று 73 கிலோ அளவிலான கேக்கை வெட்டி ரஜினி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்கள். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ரஜினியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்லும் வகையில் பல்வேறு பிறந்தநாள் ஹேஷ் டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement