• May 05 2024

இலங்கையில் தங்கியிருக்கும் 912 வெளிநாட்டு அகதிகள்!

Chithra / Dec 23rd 2022, 12:40 pm
image

Advertisement

இலங்கையில் 912 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அகதிகளாக தங்கியிருப்பதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் பிரஜைகள் என்பதுடன் 703 பாகிஸ்தான் பிரஜைகள் இலங்கையில் தங்கி இருக்கின்றனர்.

இவர்களை தவிர ஆப்கானிஸ்தானை சேர்ந்த 113 பேர், 24 ஈரானியர், 6 பாலஸ்தீன பிரஜைகள், 4 சூடானியர், 15 ஏமன் பிரஜைகள், 35 மியன்மார் பிஜைகள், எரித்திரியா மற்றும் சோமாலிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தமாக 912 வெளிநாட்டவர்கள் இலங்கையில் அகதிகளாக தங்கியிருக்கின்றனர்.

இவர்கள் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் கண்காணிப்பின் கீழ் இவ்வாறு இலங்கையில் தங்கியுள்ளனர் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இலங்கையில் தங்கியிருக்கும் 912 வெளிநாட்டு அகதிகள் இலங்கையில் 912 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அகதிகளாக தங்கியிருப்பதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் பிரஜைகள் என்பதுடன் 703 பாகிஸ்தான் பிரஜைகள் இலங்கையில் தங்கி இருக்கின்றனர்.இவர்களை தவிர ஆப்கானிஸ்தானை சேர்ந்த 113 பேர், 24 ஈரானியர், 6 பாலஸ்தீன பிரஜைகள், 4 சூடானியர், 15 ஏமன் பிரஜைகள், 35 மியன்மார் பிஜைகள், எரித்திரியா மற்றும் சோமாலிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தமாக 912 வெளிநாட்டவர்கள் இலங்கையில் அகதிகளாக தங்கியிருக்கின்றனர்.இவர்கள் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் கண்காணிப்பின் கீழ் இவ்வாறு இலங்கையில் தங்கியுள்ளனர் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement