• Apr 07 2025

இளைஞரின் வயிற்றில் 3 நாட்கள் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி : 10 நிமிடத்தில் இளைஞரை காப்பாற்றிய மருத்துவர்கள்

Anaath / Oct 13th 2024, 9:11 am
image

புதுடில்லியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர், சாலையோர உணவகம் ஒன்றில் உணவு அருந்தி உள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 3 நாட்கள் வலியுடன் சமாளித்த அவர் வேறு வழி இல்லாமல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அடுத்தக்கட்ட சிகிச்சை முறைக்கு தயாரானார்கள். எண்டாஸ்கோப்பி முறையில் சோதனை எடுத்த போது, வயிற்றில் உயிருடன் கரப்பான்பூச்சி இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.உடனடியாக தாமதிக்காமல் எண்டாஸ்கோப்பி முறையை கையாண்டு 10 நிமிடத்தில் வயிற்றில் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சியை வெளியே எடுத்தனர். அந்த கரப்பான்பூச்சி 3 செமீ நீளம் கொண்டதாக இருந்தது. 

இதுகுறித்து மருத்துவர்கள் கூறி உள்ளதாவது, மிக சரியான நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை அளித்ததால் இளைஞர் காப்பாற்றப்பட்டு உள்ளார்.இதுபோன்ற தருணங்கள் மிகவும் சிக்கலானவை. சாப்பிடும் போது இந்த கரப்பான்பூச்சியை இளைஞர் விழுங்கி இருக்கலாம். இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.

இளைஞரின் வயிற்றில் 3 நாட்கள் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி : 10 நிமிடத்தில் இளைஞரை காப்பாற்றிய மருத்துவர்கள் புதுடில்லியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர், சாலையோர உணவகம் ஒன்றில் உணவு அருந்தி உள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 3 நாட்கள் வலியுடன் சமாளித்த அவர் வேறு வழி இல்லாமல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அடுத்தக்கட்ட சிகிச்சை முறைக்கு தயாரானார்கள். எண்டாஸ்கோப்பி முறையில் சோதனை எடுத்த போது, வயிற்றில் உயிருடன் கரப்பான்பூச்சி இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.உடனடியாக தாமதிக்காமல் எண்டாஸ்கோப்பி முறையை கையாண்டு 10 நிமிடத்தில் வயிற்றில் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சியை வெளியே எடுத்தனர். அந்த கரப்பான்பூச்சி 3 செமீ நீளம் கொண்டதாக இருந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறி உள்ளதாவது, மிக சரியான நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை அளித்ததால் இளைஞர் காப்பாற்றப்பட்டு உள்ளார்.இதுபோன்ற தருணங்கள் மிகவும் சிக்கலானவை. சாப்பிடும் போது இந்த கரப்பான்பூச்சியை இளைஞர் விழுங்கி இருக்கலாம். இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now