• Nov 25 2024

யாழில் ஒரு கோப்பை சுடுநீர் 100 ரூபாய்..! இலங்கையில் சர்ச்சையை கிளப்பிய உணவகம்

Chithra / Dec 17th 2023, 8:51 am
image


இலங்கையில் ஒரு கோப்பை சுடுநீருக்கு 100 ரூபாய் வசூலிக்கும் கடை குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணம் - நல்லூரில் உள்ள உணவகமொன்றின் பற்றுச்சீட்டே இவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் தேசிய பாவனையாளர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 இலங்கையில் ஒரு கோப்பை சுடுநீருக்கு 100 ரூபாய் வசூலிக்கும் கடை குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த செய்தி உண்மையானது. உணவக பற்றுச்சீட்டு எம்மிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் அவசரத்திற்கு சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரை குடிக்கின்றார்கள். இப்படி ஒரு கோப்பை தண்ணீருக்கு கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது.

இது மிகப்பெரிய அநியாயம். இது போன்ற செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். இது தொடர்பாக நுகர்வோர் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்துள்ளோம்.

நுகர்வோர் சட்டத்தில் கூட இப்படி ஒரு தண்ணீருக்கு பணம் வசூலிக்க அதிகாரம் இல்லை. இதற்கு தொழிலதிபர்களை குறை சொல்ல முடியாது.


நாமெல்லாம் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறோம். மின் கட்டணம் விண்ணை முட்டும் அளவில் உள்ளது. அதனால் அனைவருக்கும் கடினமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இவ்வாறு செய்கின்றார்கள்.

எனினும் இதனை அனுமதிக்க முடியாது. இது ஒரு மோசமான முன்னுதாரணமாகும். இதை இங்கிருந்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனை ஏற்படும். முறையான கட்டுப்பாடு இல்லாதது தான் இதற்கு காரணமாகும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


யாழில் ஒரு கோப்பை சுடுநீர் 100 ரூபாய். இலங்கையில் சர்ச்சையை கிளப்பிய உணவகம் இலங்கையில் ஒரு கோப்பை சுடுநீருக்கு 100 ரூபாய் வசூலிக்கும் கடை குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.யாழ்ப்பாணம் - நல்லூரில் உள்ள உணவகமொன்றின் பற்றுச்சீட்டே இவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பில் தேசிய பாவனையாளர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் வெளிப்படுத்தியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் ஒரு கோப்பை சுடுநீருக்கு 100 ரூபாய் வசூலிக்கும் கடை குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இந்த செய்தி உண்மையானது. உணவக பற்றுச்சீட்டு எம்மிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மக்கள் அவசரத்திற்கு சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரை குடிக்கின்றார்கள். இப்படி ஒரு கோப்பை தண்ணீருக்கு கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது.இது மிகப்பெரிய அநியாயம். இது போன்ற செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். இது தொடர்பாக நுகர்வோர் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்துள்ளோம்.நுகர்வோர் சட்டத்தில் கூட இப்படி ஒரு தண்ணீருக்கு பணம் வசூலிக்க அதிகாரம் இல்லை. இதற்கு தொழிலதிபர்களை குறை சொல்ல முடியாது.நாமெல்லாம் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறோம். மின் கட்டணம் விண்ணை முட்டும் அளவில் உள்ளது. அதனால் அனைவருக்கும் கடினமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இவ்வாறு செய்கின்றார்கள்.எனினும் இதனை அனுமதிக்க முடியாது. இது ஒரு மோசமான முன்னுதாரணமாகும். இதை இங்கிருந்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனை ஏற்படும். முறையான கட்டுப்பாடு இல்லாதது தான் இதற்கு காரணமாகும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement