யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடித்த ஆறு பேர் ஒரு படகுடன் இன்று(26)கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் சுருக்குவலை தொழிலில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான மீன்களை அழித்து வருவதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
இந்த நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் ரகசியமான முறையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை அடுத்து கட்டைக்காடு கடல் பகுதி இன்று அதிகாலை கடற்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது
இந்த சுற்றி வளைப்பில் தடை செய்யப்பட்ட சுருக்குவலையுடன் ஒரு படகில் பயணித்த ஆறு பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்
கைது செய்யப்பட்ட நபர்களும் உடைமைகளும் சட்ட நடவடிக்கைக்காக தாளையடி கடற்தொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டது
நேற்று மாலை கடைக்காடு கடல் பரப்பிலிருந்து 70 படகுகளுக்கு மேல் சட்டவிரோத தொழிலுக்கு சென்றிருந்த நிலையிலும் கடல் படையினரால் ஒரு படகு மாத்திரமே கைது செய்யப்பட்டது
கடற்படையினரால் கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாமல் விடுவிக்கப்படுவதால் அவர்கள் தொடர்ந்தும் இதே தொழிலை புரிந்து வருகிறார்கள்
சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்து வருகிறது.இதனால் அங்கு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை குறைந்து வருகின்றது
ஆனால் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களை விடுவித்து வருகிறார்கள்
இதனால் எமது வடமராட்சிக் கிழக்கு கடல் வளம் மிக வேகமாக அழிந்து வருகின்றது
முல்லைத்தீவிற்கு ஒரு சட்டம் வடமராட்சி கிழக்கிற்கு ஒரு சட்டமா?
முல்லைத்தீவை போன்று வடமராட்சி கிழக்கிலும் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களை கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு அப்பகுதி மீனவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவிற்கு ஒரு சட்டம்வடமராட்சி கிழக்கிற்கு ஒரு சட்டமா-கைதானவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடித்த ஆறு பேர் ஒரு படகுடன் இன்று(26)கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் சுருக்குவலை தொழிலில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான மீன்களை அழித்து வருவதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்இந்த நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் ரகசியமான முறையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை அடுத்து கட்டைக்காடு கடல் பகுதி இன்று அதிகாலை கடற்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டதுஇந்த சுற்றி வளைப்பில் தடை செய்யப்பட்ட சுருக்குவலையுடன் ஒரு படகில் பயணித்த ஆறு பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்கைது செய்யப்பட்ட நபர்களும் உடைமைகளும் சட்ட நடவடிக்கைக்காக தாளையடி கடற்தொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதுநேற்று மாலை கடைக்காடு கடல் பரப்பிலிருந்து 70 படகுகளுக்கு மேல் சட்டவிரோத தொழிலுக்கு சென்றிருந்த நிலையிலும் கடல் படையினரால் ஒரு படகு மாத்திரமே கைது செய்யப்பட்டதுகடற்படையினரால் கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாமல் விடுவிக்கப்படுவதால் அவர்கள் தொடர்ந்தும் இதே தொழிலை புரிந்து வருகிறார்கள்சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்து வருகிறது.இதனால் அங்கு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை குறைந்து வருகின்றதுஆனால் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களை விடுவித்து வருகிறார்கள்இதனால் எமது வடமராட்சிக் கிழக்கு கடல் வளம் மிக வேகமாக அழிந்து வருகின்றதுமுல்லைத்தீவிற்கு ஒரு சட்டம் வடமராட்சி கிழக்கிற்கு ஒரு சட்டமா முல்லைத்தீவை போன்று வடமராட்சி கிழக்கிலும் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களை கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு அப்பகுதி மீனவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.