மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மொத்தமாக 85 மில்லியன் ரூபா நிதியினை வீடமைப்பு திட்டங்களுக்காக நாம் ஒதுக்கீடு செய்திருக்கின்றோம் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் பூர்த்தி செய்யப்படாமலுள்ள வீடமைப்புத் திட்டத்தை நிவர்த்தி செய்வதற்காக அதிலுள்ள 16 பயனாளிகளுக்கு 2.98 மில்லியன் நிதி நேற்றையதினம்(27) வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு வீடு அமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. பின்னர் அது நிதி கிடைக்கப்பெறாத காரணத்தினால் அத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படாமல் கைவிடப்பட்டுள்ளன. மீண்டும் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக எமது தேசிய மக்கள் மத்திய அரசாங்கம் அதற்கான நிதி ஒதுக்கீடுகளை ஒதுக்கீடு செய்திருக்கின்றோம்.
அந்த அடிப்படையில் மண்முனை தென் எருவில் பற்றி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குருக்கமடம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தில் உள்ள 16 பயனாளிகளுக்கும் அவர்களுடைய வீடுகளை பூர்த்தி செய்வதற்காக வேண்டிமுதற்கட்டமாக ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதுபோல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மொத்தமாக 85 மில்லியன் ரூபா நிதியினை வீடமைப்பு திட்டங்களுக்காக நாம் ஒதுக்கீடு செய்திருக்கின்றோம்.
எதிர்வரும் காலங்களில் இதுபோல் பல வீடமைப்பு திட்டங்களை நாங்கள் உருவாக்குவதற்கு தயாராக உள்ளோம். அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் எமது பிரதேசங்களுக்கும் ஒதுக்கீடு செய்வதற்காக ஜனாதிபதி அவர்களும் முன்னிலைப்படுத்தி இருக்கின்றார்.
வடக்கு கிழக்கு பிரதேசங்களிலே உள்ள வீடு இன்றி தவிக்கின்ற மக்களுக்கு அவர்களின் வீட்டு தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாம் இவ்வாறான மாதிரி வீட்டு திட்டங்களை உருவாக்கி அதனூடாக மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அதற்கான வேலைகளை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். என தெரிவித்தார்.
மட்டக்களப்பு வீடமைப்பு திட்டத்திற்கு 85 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு- கந்தசாமி பிரபு சுட்டிக்காட்டு. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மொத்தமாக 85 மில்லியன் ரூபா நிதியினை வீடமைப்பு திட்டங்களுக்காக நாம் ஒதுக்கீடு செய்திருக்கின்றோம் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் பூர்த்தி செய்யப்படாமலுள்ள வீடமைப்புத் திட்டத்தை நிவர்த்தி செய்வதற்காக அதிலுள்ள 16 பயனாளிகளுக்கு 2.98 மில்லியன் நிதி நேற்றையதினம்(27) வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.2018 ஆம் ஆண்டு வீடு அமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. பின்னர் அது நிதி கிடைக்கப்பெறாத காரணத்தினால் அத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படாமல் கைவிடப்பட்டுள்ளன. மீண்டும் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக எமது தேசிய மக்கள் மத்திய அரசாங்கம் அதற்கான நிதி ஒதுக்கீடுகளை ஒதுக்கீடு செய்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் மண்முனை தென் எருவில் பற்றி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குருக்கமடம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தில் உள்ள 16 பயனாளிகளுக்கும் அவர்களுடைய வீடுகளை பூர்த்தி செய்வதற்காக வேண்டிமுதற்கட்டமாக ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.அதுபோல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மொத்தமாக 85 மில்லியன் ரூபா நிதியினை வீடமைப்பு திட்டங்களுக்காக நாம் ஒதுக்கீடு செய்திருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் இதுபோல் பல வீடமைப்பு திட்டங்களை நாங்கள் உருவாக்குவதற்கு தயாராக உள்ளோம். அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் எமது பிரதேசங்களுக்கும் ஒதுக்கீடு செய்வதற்காக ஜனாதிபதி அவர்களும் முன்னிலைப்படுத்தி இருக்கின்றார்.வடக்கு கிழக்கு பிரதேசங்களிலே உள்ள வீடு இன்றி தவிக்கின்ற மக்களுக்கு அவர்களின் வீட்டு தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாம் இவ்வாறான மாதிரி வீட்டு திட்டங்களை உருவாக்கி அதனூடாக மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அதற்கான வேலைகளை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். என தெரிவித்தார்.