கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெலிகண்டன் பகுதியில் அமைந்துள்ள பாலம் அலைமோதிய வெள்ளத்தால் உடைந்துள்ளது.
பெரியகுளம் மற்றும் கண்டாவளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை இணைக்கும் பாலமே இவ்வாறு உடைந்துள்ளது.
நாட்டைப் புரட்டிப்போட்ட டிட்வா புயல் நாடுமுழுவதும் எண்ண முடியாத அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரையில் ஏற்படாத ஒர் அனர்த்தமாக இந்த டிட்வா புயல் பதிவாகியுள்ளது. புயலால் பல உயிரிழப்புக்களும் பலத்த சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
வெள்ளத்தின் கோரத்தால் வீதிகள், பாலங்கள், குளங்கள் என்பன உடைந்து பலத்த சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில் கிளிநொச்சியின் கண்டாவளை மற்றும் பெரியகுளம் பிரதேச செயலாளர் பிரிவுகளை இணைக்கும் பாலம் வெள்ளம் பாய்ந்ததில் இரண்டாக உடைந்துள்ளது.
இதனால் இரு பகுதி மக்களும் அத்தியாவசியமான தேவைகளுக்குக் கூட செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
நாட்டை உலுக்கிய டிட்வா புயல் நாடு முழுவதும் பரவலாக பலத்த சேதத்தை ஏற்படுத்தி மக்களை திணறவைத்துள்ளது.
வெள்ளத்தால் துண்டாடப்பட்ட கண்டாவளை பாலத்தின் காட்சி; போக்குவரத்து தடைப்பட்டதால் மக்கள் பெரும் அவதி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெலிகண்டன் பகுதியில் அமைந்துள்ள பாலம் அலைமோதிய வெள்ளத்தால் உடைந்துள்ளது. பெரியகுளம் மற்றும் கண்டாவளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை இணைக்கும் பாலமே இவ்வாறு உடைந்துள்ளது. நாட்டைப் புரட்டிப்போட்ட டிட்வா புயல் நாடுமுழுவதும் எண்ண முடியாத அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் ஏற்படாத ஒர் அனர்த்தமாக இந்த டிட்வா புயல் பதிவாகியுள்ளது. புயலால் பல உயிரிழப்புக்களும் பலத்த சேதங்களும் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தின் கோரத்தால் வீதிகள், பாலங்கள், குளங்கள் என்பன உடைந்து பலத்த சேதமடைந்துள்ளன.இந்த நிலையில் கிளிநொச்சியின் கண்டாவளை மற்றும் பெரியகுளம் பிரதேச செயலாளர் பிரிவுகளை இணைக்கும் பாலம் வெள்ளம் பாய்ந்ததில் இரண்டாக உடைந்துள்ளது. இதனால் இரு பகுதி மக்களும் அத்தியாவசியமான தேவைகளுக்குக் கூட செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். நாட்டை உலுக்கிய டிட்வா புயல் நாடு முழுவதும் பரவலாக பலத்த சேதத்தை ஏற்படுத்தி மக்களை திணறவைத்துள்ளது.