• Nov 24 2024

இடை நடுவில் கைவிடப்பட்ட வடசல் பாலம்...! போக்குவரத்து செய்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்கும் மக்கள்...!

Sharmi / Feb 21st 2024, 2:35 pm
image

கிண்ணியா  பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட பூவரசந்தீவையும் - கல்லடி வெட்டு வானையும் இணைக்கும் வடசல்பாலம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இதனால் அப்பிரதேச மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு,  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தௌபீக்  குறித்த பாலத்துக்கான அடிக்கலை நாட்டினார்.

 குறித்த பாலத்தை ஆறு மாதத்துக்குள் முடித்து தருவதாக மக்களிடம் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் இன்னும் அவை நிறைவேற்றப்படவில்லை.

இதன் காரணமாக இப் பகுதியில் சுமார் ஆறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயணம் செய்து வருகின்றதுடன்,  விவசாயம், சிறு மீன்பிடி தொழில் என பல தேவையான முக்கிய அன்றாட ஜீவனோபாயத்துக்காக இவ் ஆற்றை கடந்தே செல்ல வேண்டியுள்ளது. 

எனினும், அவை நிறைவேறவில்லை மூன்று வருடங்கள்  கடந்து நான்காவது வருடம் ஆரம்பித்த போதிலும் மக்கள் போக்குவரத்து செய்வதற்கான ஏற்ற வகையில் இன்னும் நிறைவு செய்யப்படவில்லை.இதனை பூரணமாக்கி வீதியை அமைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு அம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பாலத்தின் சில பகுதிகள் முடிவடைந்த போதிலும் இரு புறத்திலும்  உள்ள வீதிகள் செப்பனிடப்படவில்லை, இதனால் மக்கள் போக்குவரத்து செய்ய முடியவில்லை.

இதனால், பூவரசம்தீவிலிருந்து கல்லடி வெட்டுவானுக்கு செல்லும் மக்கள் பல்வேறு சிரமங்களை இதனால் எதிர்நோக்கி வருகின்றனர்.

பாடசாலை மாணவர்கள் வியாபாரிகள், கர்ப்பிணி தாய்மார்கள், நோயாளிகள் உட்பட பலரும் இப் பாலம் செப்பனிடப்படாததனால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பில் இதனை முன்னெடுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திருகோணமலை பிரதான பொறியியலாளர் அலுவலகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக வினவிய போது , இவ்வாறு பதில் கிடைக்கப் பெற்றது.

கிண்ணியா பிரதேச சபைக்கு உட்பட்ட வடசல் பாலமானது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் Rural Bridge Construction unit இரத்மலானை இன் ஊடாக நேரடியான கண்காணிப்பில் பால வேளைகள் நடைபெற்றதால் அங்கு பெறுமாறும்" சுட்டிக்காட்டப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம் கோரப்பட்ட போதும் ஒரு மாதம் கடந்தும் பதில் கிடைக்கவில்லை .தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம் உரிய தகவல் தங்களிடம் இல்லாத பட்சத்தில் குறித்த கோரிக்கை கடிதத்தை வீதி அபிவிருத்தி அதிகார சபையே உரிய பகுதிக்கு அனுப்ப வேண்டும் ஆனாலும் இவர்களின் நடைமுறை சிக்கல் காரணமாக இவ்வாற இழுத்தடிப்பு செய்யப்பட்டு பால நிர்மாண வேலைகள் வீணடிக்கப்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பாலத்தை செப்பனிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


இடை நடுவில் கைவிடப்பட்ட வடசல் பாலம். போக்குவரத்து செய்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்கும் மக்கள். கிண்ணியா  பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட பூவரசந்தீவையும் - கல்லடி வெட்டு வானையும் இணைக்கும் வடசல்பாலம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.இதனால் அப்பிரதேச மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.கடந்த 2021 ஆம் ஆண்டு,  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தௌபீக்  குறித்த பாலத்துக்கான அடிக்கலை நாட்டினார். குறித்த பாலத்தை ஆறு மாதத்துக்குள் முடித்து தருவதாக மக்களிடம் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் இன்னும் அவை நிறைவேற்றப்படவில்லை. இதன் காரணமாக இப் பகுதியில் சுமார் ஆறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயணம் செய்து வருகின்றதுடன்,  விவசாயம், சிறு மீன்பிடி தொழில் என பல தேவையான முக்கிய அன்றாட ஜீவனோபாயத்துக்காக இவ் ஆற்றை கடந்தே செல்ல வேண்டியுள்ளது. எனினும், அவை நிறைவேறவில்லை மூன்று வருடங்கள்  கடந்து நான்காவது வருடம் ஆரம்பித்த போதிலும் மக்கள் போக்குவரத்து செய்வதற்கான ஏற்ற வகையில் இன்னும் நிறைவு செய்யப்படவில்லை.இதனை பூரணமாக்கி வீதியை அமைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு அம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.பாலத்தின் சில பகுதிகள் முடிவடைந்த போதிலும் இரு புறத்திலும்  உள்ள வீதிகள் செப்பனிடப்படவில்லை, இதனால் மக்கள் போக்குவரத்து செய்ய முடியவில்லை.இதனால், பூவரசம்தீவிலிருந்து கல்லடி வெட்டுவானுக்கு செல்லும் மக்கள் பல்வேறு சிரமங்களை இதனால் எதிர்நோக்கி வருகின்றனர்.பாடசாலை மாணவர்கள் வியாபாரிகள், கர்ப்பிணி தாய்மார்கள், நோயாளிகள் உட்பட பலரும் இப் பாலம் செப்பனிடப்படாததனால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது தொடர்பில் இதனை முன்னெடுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திருகோணமலை பிரதான பொறியியலாளர் அலுவலகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக வினவிய போது , இவ்வாறு பதில் கிடைக்கப் பெற்றது.கிண்ணியா பிரதேச சபைக்கு உட்பட்ட வடசல் பாலமானது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் Rural Bridge Construction unit இரத்மலானை இன் ஊடாக நேரடியான கண்காணிப்பில் பால வேளைகள் நடைபெற்றதால் அங்கு பெறுமாறும்" சுட்டிக்காட்டப்பட்டது.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம் கோரப்பட்ட போதும் ஒரு மாதம் கடந்தும் பதில் கிடைக்கவில்லை .தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம் உரிய தகவல் தங்களிடம் இல்லாத பட்சத்தில் குறித்த கோரிக்கை கடிதத்தை வீதி அபிவிருத்தி அதிகார சபையே உரிய பகுதிக்கு அனுப்ப வேண்டும் ஆனாலும் இவர்களின் நடைமுறை சிக்கல் காரணமாக இவ்வாற இழுத்தடிப்பு செய்யப்பட்டு பால நிர்மாண வேலைகள் வீணடிக்கப்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பாலத்தை செப்பனிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement