• Mar 04 2025

பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் செல்லும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை!

Bus
Chithra / Mar 4th 2025, 7:48 am
image



இலங்கை போக்குவரத்து சபையின் பருவச்சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரஜைகளை தவிர்க்கும் போக்குவரத்து சபையின் பேருந்து சாரதிகள் குறித்து 1958 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு  முறைப்பாடு செய்யுமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

எந்தவொரு பிரஜையும் இது தொடர்பில் குறித்த இலக்கத்திக்கு அழைத்து தெரிவிக்கலாம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் சமீபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த விடயம் தனக்குத் தெரியும் என்றும், இதுபோன்ற தவறான செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கமாட்டேன் என்றும், இது குறித்து இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்குத் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் செல்லும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை இலங்கை போக்குவரத்து சபையின் பருவச்சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரஜைகளை தவிர்க்கும் போக்குவரத்து சபையின் பேருந்து சாரதிகள் குறித்து 1958 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு  முறைப்பாடு செய்யுமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.எந்தவொரு பிரஜையும் இது தொடர்பில் குறித்த இலக்கத்திக்கு அழைத்து தெரிவிக்கலாம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் சமீபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.இந்த விடயம் தனக்குத் தெரியும் என்றும், இதுபோன்ற தவறான செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கமாட்டேன் என்றும், இது குறித்து இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்குத் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement