• Apr 28 2025

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பிரபல நடிகரின் மனைவி!

Chithra / Aug 6th 2024, 9:22 am
image

 

பிரபல நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஒருவரின் மனைவி என கூறிக்கொண்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த போது குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு விமானப் பயணத் தடை விதித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

37 வயதான குறித்த பெண், தன்னை வைத்தியர் என கூறிக்கொள்வதாகவும், இவர் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.

நேற்று, இந்தியாவின் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-192 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண் விமான நிலைய பொலிஸாரால் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பிரபல நடிகரின் மனைவி  பிரபல நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஒருவரின் மனைவி என கூறிக்கொண்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த போது குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு விமானப் பயணத் தடை விதித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.37 வயதான குறித்த பெண், தன்னை வைத்தியர் என கூறிக்கொள்வதாகவும், இவர் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.நேற்று, இந்தியாவின் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-192 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட பெண் விமான நிலைய பொலிஸாரால் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now