• May 18 2024

உலக பணக்காரர்கள் பட்டியலில் 22வது இடத்துக்கு சரிந்த அதானி!

Chithra / Feb 4th 2023, 5:25 pm
image

Advertisement

அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு புகாரை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக குறைந்து வந்த காரணத்தால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறியுள்ளார்.

கவுதம் அதானி 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 2-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம் முதலிடத்திலும், எலான் மஸ்க் இரண்டாவது இடத்திலும், முகேஷ் அம்பானி 12-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 பேரில் ஒருவராக இருந்த அதானியை இந்தியாவின் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளி ஆசியாவின் பணக்கார இந்தியர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் 22வது இடத்துக்கு சரிந்த அதானி அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு புகாரை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக குறைந்து வந்த காரணத்தால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார்.இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறியுள்ளார்.கவுதம் அதானி 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 2-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம் முதலிடத்திலும், எலான் மஸ்க் இரண்டாவது இடத்திலும், முகேஷ் அம்பானி 12-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 பேரில் ஒருவராக இருந்த அதானியை இந்தியாவின் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளி ஆசியாவின் பணக்கார இந்தியர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement