• Nov 25 2024

முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்து...! பொலிஸார் மீது மக்கள் குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Jan 12th 2024, 10:09 am
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் மூவர் சிறுகாயங்களிற்குள்ளாகினர்.

குறித்த விபத்து நேற்று இரவு 10 மணியளவில் முறிகண்டி பொலிஸ் காவலரணுக்கு அண்மித்து A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. 

பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து தரிப்பிடத்தில் தரித்துள்ளது.

அதே திசையில் பயணித்த ரிப்பர் வாகனம் பேருந்தின் பின்னால் மோதியுள்ளது.

சம்பவத்தில் சிறு காயங்களுக்குள்ளான பயணிகள் மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிசார் சீர் செய்தனர்.

பெயரளவில் மாத்திரம் முறிகண்டி பொலிஸ் காவலரண் காணப்படுவதாகவும், அதனால் எப்பயனும் மக்களுக்கு இல்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மாங்குளம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க கால தாமதம் ஆனதால், பெரும் அசௌகரியங்களை மக்கள் எதிர்கொண்டனர்.

மாங்குளம் பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரியின் அசமந்த போக்கு தொடர்பில் மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு பல முறை மக்களால் கொண்டு செல்லப்பட்ட போதிலும், எவ்வித மாற்றமும் இல்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.




முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்து. பொலிஸார் மீது மக்கள் குற்றச்சாட்டு.samugammedia முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் மூவர் சிறுகாயங்களிற்குள்ளாகினர்.குறித்த விபத்து நேற்று இரவு 10 மணியளவில் முறிகண்டி பொலிஸ் காவலரணுக்கு அண்மித்து A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து தரிப்பிடத்தில் தரித்துள்ளது.அதே திசையில் பயணித்த ரிப்பர் வாகனம் பேருந்தின் பின்னால் மோதியுள்ளது. சம்பவத்தில் சிறு காயங்களுக்குள்ளான பயணிகள் மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிசார் சீர் செய்தனர்.பெயரளவில் மாத்திரம் முறிகண்டி பொலிஸ் காவலரண் காணப்படுவதாகவும், அதனால் எப்பயனும் மக்களுக்கு இல்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.மாங்குளம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க கால தாமதம் ஆனதால், பெரும் அசௌகரியங்களை மக்கள் எதிர்கொண்டனர்.மாங்குளம் பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரியின் அசமந்த போக்கு தொடர்பில் மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு பல முறை மக்களால் கொண்டு செல்லப்பட்ட போதிலும், எவ்வித மாற்றமும் இல்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement