• Oct 07 2024

திருமலையில் பண்ணையாளர்களுக்கு நஷ்டஈட்டுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு..!samugammedia

Sharmi / Jul 13th 2023, 12:53 pm
image

Advertisement

2022 ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட குளிரினால் , கால்நடைகள் உயிரிழந்த பண்ணையாளர்களுக்கு நஷ்டஈட்டுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு ,  திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கால்நடை பிராந்திய பயிற்சி நிலையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 151 பண்ணையாளர்களுக்கு நஷ்டஈட்டுக்கான காசோலைகள்  வழங்கப்பட்டன.இதில் பெரிய மாடொன்றுக்கு 20 ஆயிரம், சிறிய மாட்டுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டிருந்தன.அத்தோடு இறந்த ஆடுகளுக்கான நஷ்டஈடும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார்.

ஏனைய அதிதிகளாக , கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் I.K.G.முத்துபண்டா, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் L.P.மதநாயக்க ,கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் எம்.ஏ.எம்.பாஷி உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர். 



திருமலையில் பண்ணையாளர்களுக்கு நஷ்டஈட்டுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு.samugammedia 2022 ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட குளிரினால் , கால்நடைகள் உயிரிழந்த பண்ணையாளர்களுக்கு நஷ்டஈட்டுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு ,  திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கால்நடை பிராந்திய பயிற்சி நிலையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.இதன்போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 151 பண்ணையாளர்களுக்கு நஷ்டஈட்டுக்கான காசோலைகள்  வழங்கப்பட்டன.இதில் பெரிய மாடொன்றுக்கு 20 ஆயிரம், சிறிய மாட்டுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டிருந்தன.அத்தோடு இறந்த ஆடுகளுக்கான நஷ்டஈடும் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார்.ஏனைய அதிதிகளாக , கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் I.K.G.முத்துபண்டா, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் L.P.மதநாயக்க ,கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் எம்.ஏ.எம்.பாஷி உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement