• Oct 09 2024

இலங்கையின் முன்னேற்றத்துக்குத் தொடர்ந்தும் ஆதரவு - விஜித ஹேரத்தை சந்தித்த ஜூலி சங் உறுதி

Chithra / Oct 2nd 2024, 11:58 am
image

Advertisement

 

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்  ஜூலி சங் இன்று (02) சந்தித்துள்ளார்.

சமூக ஊடக பதிவில் அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் வெளிவிவகார அமைச்சரை அவரது புதிய பதவியில் சந்திக்க முடிந்துள்ளமை குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன்.

அமெரிக்க இலங்கை கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பு, வர்த்தகம், மனித உரிமைகளை உறுதி செய்தல் போன்ற பகிரப்பட்ட முன்னுரிமைகளில் இணைந்து செயற்படுவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.

தேசிய ஐக்கியம், நீதி மற்றும் வெளிப்படை தன்மை மிக்க ஆட்சி ஆகியவற்றில் இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவுவது குறித்து அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. என பதிவிட்டுள்ளார்.


இலங்கையின் முன்னேற்றத்துக்குத் தொடர்ந்தும் ஆதரவு - விஜித ஹேரத்தை சந்தித்த ஜூலி சங் உறுதி  இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்  ஜூலி சங் இன்று (02) சந்தித்துள்ளார்.சமூக ஊடக பதிவில் அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது,இலங்கையின் வெளிவிவகார அமைச்சரை அவரது புதிய பதவியில் சந்திக்க முடிந்துள்ளமை குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன்.அமெரிக்க இலங்கை கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பு, வர்த்தகம், மனித உரிமைகளை உறுதி செய்தல் போன்ற பகிரப்பட்ட முன்னுரிமைகளில் இணைந்து செயற்படுவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.தேசிய ஐக்கியம், நீதி மற்றும் வெளிப்படை தன்மை மிக்க ஆட்சி ஆகியவற்றில் இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவுவது குறித்து அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement