• Mar 04 2025

கடலில் மிதந்து வந்த பொருள் - திறந்துபார்க்க முற்பட்ட இளைஞருக்கு நடந்த விபரீதம்

Thansita / Mar 3rd 2025, 10:57 pm
image

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கடற் பகுதியில் பொருளொன்று மிதந்து வந்துள்ளது.

மிதந்துவந்த பொருளை திறந்து பார்க்க முற்பட்டபோது இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதிஇதிருநீற்றுக்கேணி பகுதியை சேர்ந்த 23வயதுடைய வரதராஜன் என்னும் இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.

இவர் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

நான்கு இளைஞர்கள் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது குறித்த பொருள் கடலில் மிதந்து வந்த நிலையில் அதனை திறக்கமுற்பட்டபோதே வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற பொலிஸார்.மற்றும் இராணுவத்தினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

கடலில் மிதந்து வந்த பொருள் - திறந்துபார்க்க முற்பட்ட இளைஞருக்கு நடந்த விபரீதம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கடற் பகுதியில் பொருளொன்று மிதந்து வந்துள்ளது.மிதந்துவந்த பொருளை திறந்து பார்க்க முற்பட்டபோது இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இன்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதிஇதிருநீற்றுக்கேணி பகுதியை சேர்ந்த 23வயதுடைய வரதராஜன் என்னும் இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.இவர் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.நான்கு இளைஞர்கள் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது குறித்த பொருள் கடலில் மிதந்து வந்த நிலையில் அதனை திறக்கமுற்பட்டபோதே வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற பொலிஸார்.மற்றும் இராணுவத்தினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement