• Mar 23 2025

பாராளுமன்ற அமர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

Sharmi / Mar 22nd 2025, 7:54 pm
image

எதிர்வரும் மே மாதத்தின் பாராளுமன்ற அமர்வு தொடர்பில் பாராளுமன்ற செயலகம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

உள்ளூராட்சி சபை தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவிருப்பதால் மே மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வுகளை மே 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று(21) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது. 

அத்துடன், குறித்த தினங்களுக்கான பாராளுமன்ற அலுவல்கள் பற்றி ஏப்ரல் முதல் வாரத்தில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வு வாரத்தில் தீர்மானிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது. 

மேலும், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய ஏப்ரல் மாதத்திற்கான பாராளுமன்ற அமர்வுகள் ஏப்ரல் 8, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற அமர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு. எதிர்வரும் மே மாதத்தின் பாராளுமன்ற அமர்வு தொடர்பில் பாராளுமன்ற செயலகம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவிருப்பதால் மே மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வுகளை மே 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று(21) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், குறித்த தினங்களுக்கான பாராளுமன்ற அலுவல்கள் பற்றி ஏப்ரல் முதல் வாரத்தில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வு வாரத்தில் தீர்மானிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது. மேலும், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய ஏப்ரல் மாதத்திற்கான பாராளுமன்ற அமர்வுகள் ஏப்ரல் 8, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement