• Dec 14 2024

இந்தியாவில் மீண்டுமொரு இயற்கை அனர்த்தம் - இமாசலப்பிரதேசத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் கதிகலங்கிய மக்கள்!

Anaath / Aug 1st 2024, 12:49 pm
image

இந்தியாவின் 18 ஆவது மாநிலமான  இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள  சிம்லா மாவட்டத்தில் அமைந்துள்ள ராம்பூர் இருவர் பகுதியில் உள்ள சமேஜ் காட் பகுதியில் இன்றைய தினம் (1) ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கட்டிடம் ஒன்று இடிந்து பார்வதி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதனையடுத்து மாநில பேரிடர் மற்றும் மீட்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். இதுவரை  50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பருவமழைக் காலங்களில், கனத்த நீர்த்துளிகளுடன் மேகம் ஊர்ந்து செல்லும் போது, ​​நிலத்தில் இருந்து எழும் சூடான காற்று, மழைத்துளிகள் விழாமல் தடுக்கிறது. இந்த அனல் காற்று கிட்டத்தட்ட மேகத்திலிருந்து வெளியேறிய தண்ணீரை மீண்டும் மேகத்திற்குள் அனுப்பும்.

இதனால், கனமான நீர்த்துளிகளை மேகத்திற்கு அனுப்பும் வெப்பக் காற்றழுத்தம், ஒரே நேரத்தில் மொத்தமாக மழை பெய்யச் செய்யும். இதன் காரணமாக மழைநீர் துளி துளியாக இல்லாமல் அருவி போல் விழுவதால் அதன் வலிமையும் வேகமும் மிக அதிகமாக இருக்கும் . இதனுடன் காற்றின் வேகமும் சேர்ந்தால், அதன் தீவிரம் அதிகரிக்கும். இதனால்தான் மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம், கடுமையான நிலச்சரிவுகள் மற்றும் உயர்மட்ட இடியுடன் கூடிய மழை ஆகியவை சில மணிநேரங்களில் பாரிய சேதத்தை ஏற்படுத்தும்.

அத்தகைய ஒரு மேக வெடிப்பு அனர்த்தமே இன்றைய தினம் அந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை  மேக வெடிப்பு காரணமாக பல வீடுகளும் சேதமடைந்துள்ளதாவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இமாச்சல பிரதேச அமைச்சர் ஜகத் சிங் நேகி கூறுகையில், "சிம்லா மாவட்டத்தில் உள்ள சமேஜ் பகுதியில் இதுவரை 36 பேர் காணாமல் போயுள்ளனர். அதேபோல், மண்டியின் டிக்கன் பகுதியில் 8 பேரைக் காணவில்லை. 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் காயமடைந்துள்ளார். குலு பகுதியில் உள்ள மலானாவில் மின்வாரியத்தின் தடுப்பணை உடைந்ததால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அங்கு தற்போது சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

அத்துடன் மேலும் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இது தொடர்பான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதுடன் முன்னதாக மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட பெரும் பாதிப்பைத் தொடர்ந்து நிலவரத்தை மதிப்பீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுடன் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை (30) கேரளாவில் பெய்த அதீத கனமழை காரணமாக வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 282 பேர் உயிரிழந்த நிலையில் இன்று ஏற்பட்டுள்ள குறித்த அனர்தமானது அனைவரையும் அச்சுறுத்தியுள்ளதுடன் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மீண்டுமொரு இயற்கை அனர்த்தம் - இமாசலப்பிரதேசத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் கதிகலங்கிய மக்கள் இந்தியாவின் 18 ஆவது மாநிலமான  இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள  சிம்லா மாவட்டத்தில் அமைந்துள்ள ராம்பூர் இருவர் பகுதியில் உள்ள சமேஜ் காட் பகுதியில் இன்றைய தினம் (1) ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கட்டிடம் ஒன்று இடிந்து பார்வதி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இதனையடுத்து மாநில பேரிடர் மற்றும் மீட்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். இதுவரை  50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.பருவமழைக் காலங்களில், கனத்த நீர்த்துளிகளுடன் மேகம் ஊர்ந்து செல்லும் போது, ​​நிலத்தில் இருந்து எழும் சூடான காற்று, மழைத்துளிகள் விழாமல் தடுக்கிறது. இந்த அனல் காற்று கிட்டத்தட்ட மேகத்திலிருந்து வெளியேறிய தண்ணீரை மீண்டும் மேகத்திற்குள் அனுப்பும்.இதனால், கனமான நீர்த்துளிகளை மேகத்திற்கு அனுப்பும் வெப்பக் காற்றழுத்தம், ஒரே நேரத்தில் மொத்தமாக மழை பெய்யச் செய்யும். இதன் காரணமாக மழைநீர் துளி துளியாக இல்லாமல் அருவி போல் விழுவதால் அதன் வலிமையும் வேகமும் மிக அதிகமாக இருக்கும் . இதனுடன் காற்றின் வேகமும் சேர்ந்தால், அதன் தீவிரம் அதிகரிக்கும். இதனால்தான் மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம், கடுமையான நிலச்சரிவுகள் மற்றும் உயர்மட்ட இடியுடன் கூடிய மழை ஆகியவை சில மணிநேரங்களில் பாரிய சேதத்தை ஏற்படுத்தும்.அத்தகைய ஒரு மேக வெடிப்பு அனர்த்தமே இன்றைய தினம் அந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.இதேவேளை  மேக வெடிப்பு காரணமாக பல வீடுகளும் சேதமடைந்துள்ளதாவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து இமாச்சல பிரதேச அமைச்சர் ஜகத் சிங் நேகி கூறுகையில், "சிம்லா மாவட்டத்தில் உள்ள சமேஜ் பகுதியில் இதுவரை 36 பேர் காணாமல் போயுள்ளனர். அதேபோல், மண்டியின் டிக்கன் பகுதியில் 8 பேரைக் காணவில்லை. 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் காயமடைந்துள்ளார். குலு பகுதியில் உள்ள மலானாவில் மின்வாரியத்தின் தடுப்பணை உடைந்ததால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அங்கு தற்போது சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.அத்துடன் மேலும் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இது தொடர்பான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதுடன் முன்னதாக மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட பெரும் பாதிப்பைத் தொடர்ந்து நிலவரத்தை மதிப்பீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுடன் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது .இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை (30) கேரளாவில் பெய்த அதீத கனமழை காரணமாக வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 282 பேர் உயிரிழந்த நிலையில் இன்று ஏற்பட்டுள்ள குறித்த அனர்தமானது அனைவரையும் அச்சுறுத்தியுள்ளதுடன் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement