• Nov 25 2024

''தேர்தல் பிரச்சாரத்தை கனடாவில் ஆரம்பித்த அனுரகுமார...!!

Tamil nila / Mar 24th 2024, 11:08 pm
image

கனடாவுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கனடாவின் டொரன்டோ மற்றும் வான்கூவர் ஆகிய இரு பிரதான நகரங்களில் நேற்றும் இன்றும்  இலங்கையர்களுடனான சந்திப்புக்களில்  அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்றுள்ளார்.  

கனடாவுக்கு சென்றுள்ள அநுர குமார திசாநாயக்கவுக்கு டொரன்டோ விமான நிலையத்தில் கனடாவாழ் இலங்கையர்களால்  வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கனடாவின் ரொறொன்ரோ நகரில் நேற்று (23) அந்த நாட்டிலுள்ள இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போது  கருத்து தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க,.

"நாடாளுமன்றத் தேர்தலை முன்னதாக நடத்தினால் நல்லது என்கிறார் பெசில். ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிப்பது மிகவும் கடினம் என்பதால். ரணிலை ஆதரித்தால் மொட்டு கட்சி அழிந்து விடும். அல்லது வேறு யாரையாவது முன்னிறுத்த வேண்டும். 

வேறொருவர் முன்னிறுத்தப்பட்டால் அவர்களுக்கு வாக்குகள் கிடைக்காது. பொதுத்தேர்தலை ரணிலால் மாத்திரமே முன்கூட்டி நடத்த முடியும். இன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ரணிலின் அதிகாரம் நாளை முடிவுக்கு வரும். 

மேலும் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு அமைய செப்டம்பர் 28 அல்லது ஒக்டோபர் 05ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற வேண்டும். அதை யாராலும் தடுக்க முடியாது. மக்கள் அழுத்தங்களை தாங்கிக் கொண்டிருக்கின்றனர், தேர்தலில் பாடம் புகட்டுவதற்காக. நாட்டை கட்டியெழுப்ப எங்களுடன் இணையுங்கள். மக்களினதும் ஆட்சியாளரினதும் எதிர்பார்ப்புக்களை ஒன்றிணைக்கும் அரசாங்கத்தை அமைப்போம்."-  என்றார்.






''தேர்தல் பிரச்சாரத்தை கனடாவில் ஆரம்பித்த அனுரகுமார. கனடாவுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க விஜயம் மேற்கொண்டுள்ளார்.கனடாவின் டொரன்டோ மற்றும் வான்கூவர் ஆகிய இரு பிரதான நகரங்களில் நேற்றும் இன்றும்  இலங்கையர்களுடனான சந்திப்புக்களில்  அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்றுள்ளார்.  கனடாவுக்கு சென்றுள்ள அநுர குமார திசாநாயக்கவுக்கு டொரன்டோ விமான நிலையத்தில் கனடாவாழ் இலங்கையர்களால்  வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.கனடாவின் ரொறொன்ரோ நகரில் நேற்று (23) அந்த நாட்டிலுள்ள இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போது  கருத்து தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க,."நாடாளுமன்றத் தேர்தலை முன்னதாக நடத்தினால் நல்லது என்கிறார் பெசில். ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிப்பது மிகவும் கடினம் என்பதால். ரணிலை ஆதரித்தால் மொட்டு கட்சி அழிந்து விடும். அல்லது வேறு யாரையாவது முன்னிறுத்த வேண்டும். வேறொருவர் முன்னிறுத்தப்பட்டால் அவர்களுக்கு வாக்குகள் கிடைக்காது. பொதுத்தேர்தலை ரணிலால் மாத்திரமே முன்கூட்டி நடத்த முடியும். இன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ரணிலின் அதிகாரம் நாளை முடிவுக்கு வரும். மேலும் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு அமைய செப்டம்பர் 28 அல்லது ஒக்டோபர் 05ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற வேண்டும். அதை யாராலும் தடுக்க முடியாது. மக்கள் அழுத்தங்களை தாங்கிக் கொண்டிருக்கின்றனர், தேர்தலில் பாடம் புகட்டுவதற்காக. நாட்டை கட்டியெழுப்ப எங்களுடன் இணையுங்கள். மக்களினதும் ஆட்சியாளரினதும் எதிர்பார்ப்புக்களை ஒன்றிணைக்கும் அரசாங்கத்தை அமைப்போம்."-  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement