• Apr 01 2025

அநுரவுக்கு அடுத்த அதிர்ச்சி; மற்றுமொரு அரச அதிகாரி திடீர் இராஜினாமா!

Chithra / Mar 28th 2025, 9:34 am
image


தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பந்துல திலீப விதாரண, தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அதற்கான கடிதத்தை அவர் போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்துக் குழுவின் தலைவராகவும் பணியாற்றிய  திலீப விதாரண, நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.

பிமல் ரத்நாயக்க அமைச்சராக உள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின்கீழ் வரும் நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த மூன்றாவது அதிகாரி இவராவார். 

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய டாக்டர் ருவன் விஜயமுனி மற்றும் தேசிய போக்குவரத்து சபையின் தலைவராகப் பணியாற்றிய ரமல் சிறிவர்தன ஆகியோர் முன்னர் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது. 

அநுரவுக்கு அடுத்த அதிர்ச்சி; மற்றுமொரு அரச அதிகாரி திடீர் இராஜினாமா தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பந்துல திலீப விதாரண, தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.அதற்கான கடிதத்தை அவர் போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்துக் குழுவின் தலைவராகவும் பணியாற்றிய  திலீப விதாரண, நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.பிமல் ரத்நாயக்க அமைச்சராக உள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின்கீழ் வரும் நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த மூன்றாவது அதிகாரி இவராவார். தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய டாக்டர் ருவன் விஜயமுனி மற்றும் தேசிய போக்குவரத்து சபையின் தலைவராகப் பணியாற்றிய ரமல் சிறிவர்தன ஆகியோர் முன்னர் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement