• Nov 26 2024

ஜேர்மனியில் இடம்பெற்ற திருவிழாவில் கத்திக்குத்து தாக்குல்- மூவர் மரணம் பலர் காயம்..!

Sharmi / Aug 24th 2024, 9:10 am
image

மேற்கு ஜேர்மனியின் சோலிங்கனில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொழில் நகரம் உருவாக்கப்பட்டு 650 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் நகரின் மையப் பகுதியில் நேற்றையதினம் மாலை நடைபெற்ற விசேட நிகழ்வின் போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வீதிக்கு அருகில் இருந்த தாக்குதல்தாரி, அவ்வழியாகச் சென்றவர்களை கத்தியால் குத்திவிட்டு ஓடியதாகவும், இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை,குறித்த தாக்குதலில் காயமடைந்தவர்களை பாதுகாப்பு படையினர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவரைக் கண்டுபிடிக்க அப் பகுதியில் பாரிய தேடுதல் வேட்டை நடந்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த தேடுதல் நடவடிக்கை காரணமாக சோலிங்கனில் சாலைகள் தடைபட்டுள்ளன.

மேலும் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்வதால் குடியிருப்பாளர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


ஜேர்மனியில் இடம்பெற்ற திருவிழாவில் கத்திக்குத்து தாக்குல்- மூவர் மரணம் பலர் காயம். மேற்கு ஜேர்மனியின் சோலிங்கனில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தொழில் நகரம் உருவாக்கப்பட்டு 650 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் நகரின் மையப் பகுதியில் நேற்றையதினம் மாலை நடைபெற்ற விசேட நிகழ்வின் போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.வீதிக்கு அருகில் இருந்த தாக்குதல்தாரி, அவ்வழியாகச் சென்றவர்களை கத்தியால் குத்திவிட்டு ஓடியதாகவும், இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை,குறித்த தாக்குதலில் காயமடைந்தவர்களை பாதுகாப்பு படையினர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.தாக்குதல் நடத்தியவரைக் கண்டுபிடிக்க அப் பகுதியில் பாரிய தேடுதல் வேட்டை நடந்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இதேவேளை குறித்த தேடுதல் நடவடிக்கை காரணமாக சோலிங்கனில் சாலைகள் தடைபட்டுள்ளன.மேலும் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்வதால் குடியிருப்பாளர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement