• Jul 27 2024

புதிய ஏற்றுமதித்துறை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் : ஜனாதிபதி தெரிவிப்பு!samugammedia

Tamil nila / Nov 23rd 2023, 9:50 pm
image

Advertisement

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்கு தற்போதுள்ள ஏற்றுமதிச் செயற்பாடுகளை வலுவூட்டுவது மாத்திரம் போதுமானதல்ல. எனவே, புதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  

அதற்காக புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமெனவும் அவர்களுக்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் தெரிவித்தார். 

விவசாய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்றை இந்நாட்டில் நிறுவ திட்டமிட்டிருப்பதாகவும், தற்போதுள்ள விவசாய ஆய்வு நிறுவனம் மறுசீரமைத்து, நவீனமயப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று  (23) நடைபெற்ற 25 ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக  சேவையாற்றிய ஏற்றுமதியாளர்களைப் பாராட்டும் வகையில் இலங்கை ஏற்றுமதிச் சபையினால் வருடாந்தம் மேற்படி விருது விழா ஏற்பாடு செய்யப்படுவதோடு, 2021/22 மற்றும் 2022/23 ஆம் வருடங்களில் இலங்கையின் சிறந்த ஏற்றுமதியாளர் இம்முறை பாராட்டப்பட்டனர்.  

அனைத்து நிதித்துறைகளையும் உள்ளடக்கி 13 விருதுகளும் உற்பத்தி மற்றும் சேவை துறைகளுக்காக 15 விருதுகளும் இரண்டு பிரதான பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டன.  

மேலும், விண்ணபதாரர்களின் செயற்திறன் அடிப்படையில் நடுவர்கள் குழுவினால் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைவாக தகுதி பெற்ற பிரிவுகளுக்காக இம்முறை விருது வழங்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும். 

இதன்போது தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியினால் நினைவு சின்னங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 

கடந்த இரு வருடங்கள் நம் அனைவருக்கும் மிகக் நெருக்கடியானதாக அமைந்திருந்தது. நாட்டில் பொருளாதார வளர்ச்சியின்மையும், வர்த்தகத்  துறைக்கும் நாட்டுக்கு சாதகமான நிலைமை காணப்படாமையும் அதற்கான காரணமாக அமைந்தது.   

சுதந்திரத்திக்குப் பின்னர் இலங்கைக்கு ஏற்றுமதி பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்தி இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு 04 சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன . சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் 60,70 ஆம் நூற்றாண்டுகளின் தசாப்தங்களின் ஆரம்ப காலத்தில் ஏற்றுமதி பொருளாதாரத்துடன் அவர்களின் பயணத்தை தொடர்ந்தனர். நாம் பொதுவுடமை பொருளாதார கொள்கையை பின்பற்றியதால் நமக்கான வாய்ப்புக்கள் நழுவிச் சென்றன.  

அதேபோல், 80 ஆம் தசாப்தத்தின் ஆரம்ப பகுதியில் நாம் ஏற்றுமதி பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தினோம். அதற்கிடையில் யுத்தம் வந்தமையால் எமது வளங்களை யுத்த வெற்றிக்காக பயன்படுத்த வேண்டியிருந்தது. அந்த நேரந்திலும் நமக்கான வாய்ப்பு இல்லாமல் போனது.   

யுத்தம் நிறைவுற்ற பின்னர் அடுத்த வாய்ப்பு கிட்டியது இருப்பினும் அந்த நேரத்தில் வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத பொருட்கள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டது. இன்று சிங்கப்பூர், மலேசியா, இந்துநேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் எம்மை கடந்துச் சென்றுள்ளன. 

அதனால் இதுவே நமக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பமாகும். கடந்த நெருக்கடியான காலத்தில் இந்நாட்டின் இளைஞர் யுவதிகள் பலரும் நாட்டை விட்டுச் சென்றனர். அவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் நாடு திரும்பினாலும் அவர்களுடைய இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் இலங்கைக்கு வரப்போவதில்லை. அவ்வாறான நிலைமைகளை மாற்றியமைக்க நாம் முயற்சிக்க வேண்டும்.   என்றார்.

புதிய ஏற்றுமதித்துறை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் : ஜனாதிபதி தெரிவிப்புsamugammedia நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்கு தற்போதுள்ள ஏற்றுமதிச் செயற்பாடுகளை வலுவூட்டுவது மாத்திரம் போதுமானதல்ல. எனவே, புதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  அதற்காக புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமெனவும் அவர்களுக்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் தெரிவித்தார். விவசாய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்றை இந்நாட்டில் நிறுவ திட்டமிட்டிருப்பதாகவும், தற்போதுள்ள விவசாய ஆய்வு நிறுவனம் மறுசீரமைத்து, நவீனமயப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று  (23) நடைபெற்ற 25 ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.  இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக  சேவையாற்றிய ஏற்றுமதியாளர்களைப் பாராட்டும் வகையில் இலங்கை ஏற்றுமதிச் சபையினால் வருடாந்தம் மேற்படி விருது விழா ஏற்பாடு செய்யப்படுவதோடு, 2021/22 மற்றும் 2022/23 ஆம் வருடங்களில் இலங்கையின் சிறந்த ஏற்றுமதியாளர் இம்முறை பாராட்டப்பட்டனர்.  அனைத்து நிதித்துறைகளையும் உள்ளடக்கி 13 விருதுகளும் உற்பத்தி மற்றும் சேவை துறைகளுக்காக 15 விருதுகளும் இரண்டு பிரதான பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டன.  மேலும், விண்ணபதாரர்களின் செயற்திறன் அடிப்படையில் நடுவர்கள் குழுவினால் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைவாக தகுதி பெற்ற பிரிவுகளுக்காக இம்முறை விருது வழங்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும். இதன்போது தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியினால் நினைவு சின்னங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த இரு வருடங்கள் நம் அனைவருக்கும் மிகக் நெருக்கடியானதாக அமைந்திருந்தது. நாட்டில் பொருளாதார வளர்ச்சியின்மையும், வர்த்தகத்  துறைக்கும் நாட்டுக்கு சாதகமான நிலைமை காணப்படாமையும் அதற்கான காரணமாக அமைந்தது.   சுதந்திரத்திக்குப் பின்னர் இலங்கைக்கு ஏற்றுமதி பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்தி இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு 04 சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன . சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் 60,70 ஆம் நூற்றாண்டுகளின் தசாப்தங்களின் ஆரம்ப காலத்தில் ஏற்றுமதி பொருளாதாரத்துடன் அவர்களின் பயணத்தை தொடர்ந்தனர். நாம் பொதுவுடமை பொருளாதார கொள்கையை பின்பற்றியதால் நமக்கான வாய்ப்புக்கள் நழுவிச் சென்றன.  அதேபோல், 80 ஆம் தசாப்தத்தின் ஆரம்ப பகுதியில் நாம் ஏற்றுமதி பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தினோம். அதற்கிடையில் யுத்தம் வந்தமையால் எமது வளங்களை யுத்த வெற்றிக்காக பயன்படுத்த வேண்டியிருந்தது. அந்த நேரந்திலும் நமக்கான வாய்ப்பு இல்லாமல் போனது.   யுத்தம் நிறைவுற்ற பின்னர் அடுத்த வாய்ப்பு கிட்டியது இருப்பினும் அந்த நேரத்தில் வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத பொருட்கள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டது. இன்று சிங்கப்பூர், மலேசியா, இந்துநேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் எம்மை கடந்துச் சென்றுள்ளன. அதனால் இதுவே நமக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பமாகும். கடந்த நெருக்கடியான காலத்தில் இந்நாட்டின் இளைஞர் யுவதிகள் பலரும் நாட்டை விட்டுச் சென்றனர். அவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் நாடு திரும்பினாலும் அவர்களுடைய இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் இலங்கைக்கு வரப்போவதில்லை. அவ்வாறான நிலைமைகளை மாற்றியமைக்க நாம் முயற்சிக்க வேண்டும்.   என்றார்.

Advertisement

Advertisement

Advertisement