• Nov 28 2024

சடுதியாக திருப்ப முற்பட்ட முச்சக்கர வண்டி விபத்து - படுகாயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

Tamil nila / Jan 21st 2024, 8:35 pm
image

நாய் குறுக்கே பயந்ததால் சடுதியாக திருப்ப முற்பட்ட முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் படுகாயம் அடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி மேற்கு, கைதடியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை அமல்ராஜ் (வயது- 36) என்பவராவார்.

கடந்த 17ஆம் திகதி மாலை கோப்பாய் பகுதிக்கு முச்சக்கர வண்டியில் குடும்பத்தினருடன் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது செம்மணிப் பகுதியில் திடீரென நாய் ஒன்று குறுக்கே பாய்ந்ததால் திடீரென முச்சக்கர வண்டியை அவர் திருப்பிய போது  அதில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் அவருக்கு மேல் முச்சக்கர வண்டியும் புரண்டுள்ளது.

படுகாயம் அடைந்த நிலையில் இரவு 8:30 மணி அளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை(19) உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் சனிக்கிழமை (20) யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண  விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

சடுதியாக திருப்ப முற்பட்ட முச்சக்கர வண்டி விபத்து - படுகாயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு. நாய் குறுக்கே பயந்ததால் சடுதியாக திருப்ப முற்பட்ட முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் படுகாயம் அடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி மேற்கு, கைதடியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை அமல்ராஜ் (வயது- 36) என்பவராவார்.கடந்த 17ஆம் திகதி மாலை கோப்பாய் பகுதிக்கு முச்சக்கர வண்டியில் குடும்பத்தினருடன் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது செம்மணிப் பகுதியில் திடீரென நாய் ஒன்று குறுக்கே பாய்ந்ததால் திடீரென முச்சக்கர வண்டியை அவர் திருப்பிய போது  அதில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் அவருக்கு மேல் முச்சக்கர வண்டியும் புரண்டுள்ளது.படுகாயம் அடைந்த நிலையில் இரவு 8:30 மணி அளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை(19) உயிரிழந்துள்ளார்.இம் மரணம் தொடர்பில் சனிக்கிழமை (20) யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண  விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement