• May 05 2024

அமெரிக்காவில் ஒலித்த பகவத் கீதை..! ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்..! samugammedia

Chithra / Jul 4th 2023, 11:37 am
image

Advertisement

பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்வில் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின்  ஆலன் கிழக்கு மையத்தில் பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

அந்த வகையில், இந்த நிகழ்வினை யோகா சங்கீதா மற்றும் எஸ்.ஜி.எஸ். கீதா பவுண்டேசன் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. 

அந்த, நிகழ்விற்கு 4 வயது முதல் 84  வயதிற்கு உட்பட்ட முழுவதுமாக பத்தாயிரம் பேர் வரை கலந்து கொண்டுள்ளனர். 

குரு பூர்ணிமாவை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்வானது, உலக புகழ் பெற்ற ஆன்மீக சுவாமிகளான பூஜ்ய கணபதி சச்சிதானந்த ஜி முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. இதனை மைசூரு நகரில் உள்ள அவதூத தத்தா பீடம் ஆசிரமம் தெரிவித்துள்ளது. 

அங்கு, சுவாமியின் வழிகாட்டுதலின் பேரில் குறித்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் கீதை உச்சரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

அத்துடன், அவர்களில் பலர் 8 ஆண்டுகளாக சுவாமியை பின்பற்றி அதனை நினைவில் கொள்ளும் வகையில் மனப்பாடம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அமெரிக்காவில் இந்து ஆன்மீக தன்மையை பரப்பும் நோக்குடன்  கடந்த சில நாட்களாக சுவாமிஜி இந்த நிகழ்வினை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது

அமெரிக்காவில் ஒலித்த பகவத் கீதை. ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள். samugammedia பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்வில் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின்  ஆலன் கிழக்கு மையத்தில் பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அந்த வகையில், இந்த நிகழ்வினை யோகா சங்கீதா மற்றும் எஸ்.ஜி.எஸ். கீதா பவுண்டேசன் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. அந்த, நிகழ்விற்கு 4 வயது முதல் 84  வயதிற்கு உட்பட்ட முழுவதுமாக பத்தாயிரம் பேர் வரை கலந்து கொண்டுள்ளனர். குரு பூர்ணிமாவை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்வானது, உலக புகழ் பெற்ற ஆன்மீக சுவாமிகளான பூஜ்ய கணபதி சச்சிதானந்த ஜி முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. இதனை மைசூரு நகரில் உள்ள அவதூத தத்தா பீடம் ஆசிரமம் தெரிவித்துள்ளது. அங்கு, சுவாமியின் வழிகாட்டுதலின் பேரில் குறித்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் கீதை உச்சரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், அவர்களில் பலர் 8 ஆண்டுகளாக சுவாமியை பின்பற்றி அதனை நினைவில் கொள்ளும் வகையில் மனப்பாடம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் இந்து ஆன்மீக தன்மையை பரப்பும் நோக்குடன்  கடந்த சில நாட்களாக சுவாமிஜி இந்த நிகழ்வினை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement