“இன்னும் சற்று நேரத்தில் வெடித்து விடும்” பிரபல நடிகர் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்!

557

பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வீட்டில் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், நடிகர் சரத்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற காரணத்தினால் அவரை பொலிஸார் கைது செய்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
.
‘நடிகர் சரத்குமாரின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் வெடித்து விடும்” என மர்ம நபரொருவர் தொலைபேசியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனையறிந்த பொலிஸார், கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டுக்கு விரைந்து சென்று, மோப்ப நாய் உதவியுடன் வீடு முழுவதும்
சோதனை செய்துள்ளனர்.

சோதனையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு இறுதியில் இது வெறும் புரளி என தெரியவந்துள்ளது.

இதன்பின்னர் சைபர் கிரைம் உதவியோடு மர்ம நபர் பேசிய தொலைபேசி இலக்கத்தை பொலிஸார் ஆராய்ந்துள்ளனர்.

அதன்படி, விசாரணையின் இறுதியில் தொலைபேசியில் அழைப்பு எடுத்து மிரட்டல் விடுத்த நபர் 20 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

குறித்த நபரை கைது செய்த பொலிஸார், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் எச்சரித்து விடுவித்துள்ளனர்.

குறித்த நபர், இதேபோல் முக்கிய பிரமுகர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: