• Oct 03 2024

உக்ரைனுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பொரிஸ் ஜோன்சன்!

Sharmi / Jan 23rd 2023, 5:17 pm
image

Advertisement

பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோசன், உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நகரின் புறநகர் பகுதிக்கு விஜயம் செய்த முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோசனை, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் மற்ற உக்ரைனிய அமைச்சர்கள் வரவேற்றனர்.

 ஸெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் நாட்டிற்குச் செல்வது ஒரு பாக்கியம் என பொரிஸ் ஜோசன், கூறினார்.

 முன்னாள் பிரதமரின் தனிப்பட்ட நிதி தொடர்பான புதிய கேள்விகள் பிரித்தானியாவில் எழுந்துள்ள நிலையில், இந்த முன்னறிவிப்பு இல்லாத விஜயம் வந்தது.

 கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கிவ்வின் வடமேற்கில் உள்ள புச்சா மற்றும் போரோடியங்கா நகரங்களையும் அவர் பார்வையிட்டார்.

 ‘உக்ரைனின் உண்மையான நண்பரான பொரிஸ் ஜோன்சனை நான் வரவேற்கிறேன். உங்கள் ஆதரவுக்கு பொரிஸ் நன்றி’  என டெலிகிராமில் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.



 

உக்ரைனுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பொரிஸ் ஜோன்சன் பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோசன், உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நகரின் புறநகர் பகுதிக்கு விஜயம் செய்த முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோசனை, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் மற்ற உக்ரைனிய அமைச்சர்கள் வரவேற்றனர். ஸெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் நாட்டிற்குச் செல்வது ஒரு பாக்கியம் என பொரிஸ் ஜோசன், கூறினார். முன்னாள் பிரதமரின் தனிப்பட்ட நிதி தொடர்பான புதிய கேள்விகள் பிரித்தானியாவில் எழுந்துள்ள நிலையில், இந்த முன்னறிவிப்பு இல்லாத விஜயம் வந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கிவ்வின் வடமேற்கில் உள்ள புச்சா மற்றும் போரோடியங்கா நகரங்களையும் அவர் பார்வையிட்டார். ‘உக்ரைனின் உண்மையான நண்பரான பொரிஸ் ஜோன்சனை நான் வரவேற்கிறேன். உங்கள் ஆதரவுக்கு பொரிஸ் நன்றி’  என டெலிகிராமில் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement