• May 04 2025

குடைசாய்ந்த எரிபொருள் கொள்கலன்; யாழில் இன்று அதிகாலை விபத்து

Chithra / Mar 22nd 2024, 11:17 am
image


யாழ்ப்பாணம் ஏ9 பிரதான வீதி, கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்   எரிபொருள் கொள்கலன் ஒன்று இன்று அதிகாலை குடைசாய்து   விபத்துக்குள்ளாகியுள்ளது.

தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த குறித்த வாகனமே மேற்படி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தால்  வீதிக்கு குறுக்கே கொள்கலன் காணப்பட்டதாலும் அப்பகுதியில் எரிபொருள் சிந்தியிருந்ததாலும்  சிறிது நேரம் போக்குவரத்துகள் தடைப்பட்டிருந்தன. 

குறித்த விபத்தில் உயிர்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என்பதுடன் அருகில் சென்ற பேருந்து ஒன்றின் கண்ணாடியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

குறித்த பகுதிக்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், வீதியில் இருந்து வாகனத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்


குடைசாய்ந்த எரிபொருள் கொள்கலன்; யாழில் இன்று அதிகாலை விபத்து யாழ்ப்பாணம் ஏ9 பிரதான வீதி, கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்   எரிபொருள் கொள்கலன் ஒன்று இன்று அதிகாலை குடைசாய்து   விபத்துக்குள்ளாகியுள்ளது.தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த குறித்த வாகனமே மேற்படி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தால்  வீதிக்கு குறுக்கே கொள்கலன் காணப்பட்டதாலும் அப்பகுதியில் எரிபொருள் சிந்தியிருந்ததாலும்  சிறிது நேரம் போக்குவரத்துகள் தடைப்பட்டிருந்தன. குறித்த விபத்தில் உயிர்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என்பதுடன் அருகில் சென்ற பேருந்து ஒன்றின் கண்ணாடியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த பகுதிக்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், வீதியில் இருந்து வாகனத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement

Buy Now