• Aug 09 2025

தேசிய ரீதியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!

shanuja / Aug 8th 2025, 8:39 pm
image

கல்வி அமைச்சின் விஞ்ஞான கிளையும் இலங்கை விஞ்ஞான முன்னேற்ற சங்கம் இணைந்து நாடளாவிய ரீதியில் மாணவர் மத்தியில் விஞ்ஞான அறிவை வளர்க்கும் முகமாக மாணவர்கள் தாமாகவே விவசாய நுட்பங்களை கைக்கொண்டு அதனோடு தொடர்பான விஞ்ஞான நுட்பங்களை புரிந்து கொண்டு இதற்கான செயற்பட்டு அறிக்கையை மாவட்ட களக் கற்கை நிலையம் ஊடாக கல்வி அமைச்சின் விஞ்ஞானக் கிளைக்கு அனுப்பி வைப்பர்.


அதிலிருந்து தெரிவு செய்யப்படும் சிறந்த அறிக்கைகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுவர். 2024 ஆம் ஆண்டின் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.


தற்போது வெள்ளிப் பதக்கம் பெற்றவர்களின் சான்றிதழ்கள் மாவட்ட களக்கற்கைகள் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் வலிகாமம் கல்வி வலயத்திலிருந்து  வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்க நிகழ்வு 08.08.2025 அன்று வட்டு இந்து கல்லூரி தொழில்நுட்ப பீடத்தில் இடம்பெற்றது. 


இதில் யாழ். மாவட்ட களக் கற்கைகள் நிலைய முகாமையாளர்  அ. கோகுல ராஜன்  வெள்ளிப் பதக்கம் பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி  கௌரவித்தார். 


இதன்போது இவ் வருடம் little agriculturest செயற்பாட்டில் ஈடுபடும் மாணவர்களும் செயற்பாட்டுக்கு பொறுப்பான ஆசிரியர்களும், வலிகாமம் கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம்  ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

தேசிய ரீதியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல் கல்வி அமைச்சின் விஞ்ஞான கிளையும் இலங்கை விஞ்ஞான முன்னேற்ற சங்கம் இணைந்து நாடளாவிய ரீதியில் மாணவர் மத்தியில் விஞ்ஞான அறிவை வளர்க்கும் முகமாக மாணவர்கள் தாமாகவே விவசாய நுட்பங்களை கைக்கொண்டு அதனோடு தொடர்பான விஞ்ஞான நுட்பங்களை புரிந்து கொண்டு இதற்கான செயற்பட்டு அறிக்கையை மாவட்ட களக் கற்கை நிலையம் ஊடாக கல்வி அமைச்சின் விஞ்ஞானக் கிளைக்கு அனுப்பி வைப்பர்.அதிலிருந்து தெரிவு செய்யப்படும் சிறந்த அறிக்கைகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுவர். 2024 ஆம் ஆண்டின் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.தற்போது வெள்ளிப் பதக்கம் பெற்றவர்களின் சான்றிதழ்கள் மாவட்ட களக்கற்கைகள் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் வலிகாமம் கல்வி வலயத்திலிருந்து  வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்க நிகழ்வு 08.08.2025 அன்று வட்டு இந்து கல்லூரி தொழில்நுட்ப பீடத்தில் இடம்பெற்றது. இதில் யாழ். மாவட்ட களக் கற்கைகள் நிலைய முகாமையாளர்  அ. கோகுல ராஜன்  வெள்ளிப் பதக்கம் பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி  கௌரவித்தார். இதன்போது இவ் வருடம் little agriculturest செயற்பாட்டில் ஈடுபடும் மாணவர்களும் செயற்பாட்டுக்கு பொறுப்பான ஆசிரியர்களும், வலிகாமம் கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம்  ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement