• May 05 2024

அரச ஊழியர்களின் விடுமுறைகளில் ஏற்படவுள்ள மாற்றம்...!samugammedia

Sharmi / Dec 23rd 2023, 3:57 pm
image

Advertisement

நாட்டில் சேவையில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கான விடுமுறைகளை குறைக்க அரசாங்கம் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய வருடமொன்றிற்கு 42 ஆக உள்ள சாதாரண மற்றும் ஓய்வு விடுமுறையின் எண்ணிக்கையை 25 நாட்களாக குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான சட்ட விதிகளை மறுசீரமைக்க ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி.டயஸ் திறந்த மற்றும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவிற்கு அறிவித்துள்ளார்.

அதேவேளை அரச ஊழியர்களின் சாதாரண விடுமுறை நாட்களை 10 ஆகவும், ஓய்வு விடுமுறை நாட்களை 15 நாட்களாகவும் குறைக்க  திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அரச ஊழியர்களின் விடுமுறைகள் குறைக்கப்படுவது தொடர்பில் எதிர்ப்புக்களும் எழலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.



அரச ஊழியர்களின் விடுமுறைகளில் ஏற்படவுள்ள மாற்றம்.samugammedia நாட்டில் சேவையில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கான விடுமுறைகளை குறைக்க அரசாங்கம் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கமைய வருடமொன்றிற்கு 42 ஆக உள்ள சாதாரண மற்றும் ஓய்வு விடுமுறையின் எண்ணிக்கையை 25 நாட்களாக குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.இதற்கான சட்ட விதிகளை மறுசீரமைக்க ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி.டயஸ் திறந்த மற்றும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவிற்கு அறிவித்துள்ளார்.அதேவேளை அரச ஊழியர்களின் சாதாரண விடுமுறை நாட்களை 10 ஆகவும், ஓய்வு விடுமுறை நாட்களை 15 நாட்களாகவும் குறைக்க  திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், அரச ஊழியர்களின் விடுமுறைகள் குறைக்கப்படுவது தொடர்பில் எதிர்ப்புக்களும் எழலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement