• May 12 2024

கோழி இறைச்சி, முட்டைக்கு விரைவில் தீர்வு..! அமைச்சர் அறிவிப்பு samugammedia

Chithra / Jun 26th 2023, 2:02 pm
image

Advertisement

கோழி இறைச்சி மற்றும் முட்டை தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முற்றாக தீர்க்கப்படும் என நம்புவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கோழிப்பண்ணை தொழிலில் இருந்து வெளியேறும் பல வர்த்தகர்களே இந்த நெருக்கடிக்கு காரணம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 நெருக்கடி காலத்தில், முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வெகுவாகக் குறைந்திருந்ததாகவும், தொழில்துறையில் இருப்பவர்கள் தாங்க முடியாத காரணத்தால் தங்கள் வியாபாரத்தை கைவிட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தாய்க் கோழிகள் இறக்குமதியும் இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

உற்பத்தி குறைவினால் தட்டுப்பாடு ஏற்பட்டு விலையும் அதிகரித்துள்ளது.

நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் முட்டைகளை இறக்குமதி செய்ய முடிவெடுத்தோம்.

கடந்த சில வாரங்களாக உள்ளூர் பண்ணைகளில் கணிசமான எண்ணிக்கையில் குஞ்சுகள் பொறிக்கப்பட்டுள்ள நிலையில், அவை உற்பத்தியை அதிகரிக்க உதவும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனவே தற்போதுள்ள தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு அடுத்த மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்படும் என நம்புகிறோம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

கோழி இறைச்சி, முட்டைக்கு விரைவில் தீர்வு. அமைச்சர் அறிவிப்பு samugammedia கோழி இறைச்சி மற்றும் முட்டை தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முற்றாக தீர்க்கப்படும் என நம்புவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.கோழிப்பண்ணை தொழிலில் இருந்து வெளியேறும் பல வர்த்தகர்களே இந்த நெருக்கடிக்கு காரணம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.கொவிட்-19 நெருக்கடி காலத்தில், முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வெகுவாகக் குறைந்திருந்ததாகவும், தொழில்துறையில் இருப்பவர்கள் தாங்க முடியாத காரணத்தால் தங்கள் வியாபாரத்தை கைவிட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.பொருளாதார நெருக்கடி காரணமாக தாய்க் கோழிகள் இறக்குமதியும் இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.உற்பத்தி குறைவினால் தட்டுப்பாடு ஏற்பட்டு விலையும் அதிகரித்துள்ளது.நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் முட்டைகளை இறக்குமதி செய்ய முடிவெடுத்தோம்.கடந்த சில வாரங்களாக உள்ளூர் பண்ணைகளில் கணிசமான எண்ணிக்கையில் குஞ்சுகள் பொறிக்கப்பட்டுள்ள நிலையில், அவை உற்பத்தியை அதிகரிக்க உதவும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.எனவே தற்போதுள்ள தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு அடுத்த மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்படும் என நம்புகிறோம்.இந்த ஆண்டு இறுதிக்குள் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement