• May 18 2024

கொழும்பில் கோர விபத்து..! தமிழ் வர்த்தகர் பரிதாபமாக உயிரிழப்பு..! மனைவி படுகாயம்..!samugammedia

Sharmi / Jun 26th 2023, 2:02 pm
image

Advertisement

கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரின் மனைவி படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பு, இரத்மலானை பிரதேசத்தில் இன்று காலை 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது வர்த்தக நிலையத்துக்கு மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு குறித்த வர்த்தகர் பயணித்துள்ளார்.

இதன்போது எதிரே வந்த ஹயஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் குறித்த வர்த்தகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்தவரும் இரத்மலானையில் வசிப்பவருமான பாரதிராஜா முகுந்தன் (வயது 44) என்ற வர்த்தகரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஹயஸ் வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார்இ சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் கோர விபத்து. தமிழ் வர்த்தகர் பரிதாபமாக உயிரிழப்பு. மனைவி படுகாயம்.samugammedia கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரின் மனைவி படுகாயமடைந்துள்ளனர்.கொழும்பு, இரத்மலானை பிரதேசத்தில் இன்று காலை 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தனது வர்த்தக நிலையத்துக்கு மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு குறித்த வர்த்தகர் பயணித்துள்ளார்.இதன்போது எதிரே வந்த ஹயஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் குறித்த வர்த்தகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.திருகோணமலையைச் சேர்ந்தவரும் இரத்மலானையில் வசிப்பவருமான பாரதிராஜா முகுந்தன் (வயது 44) என்ற வர்த்தகரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.ஹயஸ் வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார்இ சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement