• Jan 19 2025

குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய்கள் - பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Jan 16th 2025, 11:40 am
image


நாட்டிலுள்ள குழந்தைகளிடையே நீரிழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் என்பன தற்போது அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பில் ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவ பீடத்தின் குழந்தை மருத்துவத் துறையின் பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவிக்கையில்,

அதன்படி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும், 

குழந்தைகள் ஆரோக்கியமான உணவைப் பின்பற்ற ஊக்குவிப்பது அவசியம் என்றும் பேராசிரியர்  வலியுறுத்தியுள்ளார்.

கூடுதலாக, குழந்தைகளிடையே மனநிலை தொடர்பான நோய்களும் தொடர்ந்து பதிவாகி வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கிடையில், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, யுனிசெஃப், கல்வி அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு ஆகியவை இணைந்து பாடசாலை மாணவர்களிடையே அறிவு திறன் சம்பந்தமான போட்டியை ஏற்பாடு செய்துள்ளன.

இப்போட்டியின் இறுதிச் சுற்று 25ஆம் திகதி கொழும்பில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய்கள் - பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை நாட்டிலுள்ள குழந்தைகளிடையே நீரிழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் என்பன தற்போது அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில் ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவ பீடத்தின் குழந்தை மருத்துவத் துறையின் பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவிக்கையில்,அதன்படி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும், குழந்தைகள் ஆரோக்கியமான உணவைப் பின்பற்ற ஊக்குவிப்பது அவசியம் என்றும் பேராசிரியர்  வலியுறுத்தியுள்ளார்.கூடுதலாக, குழந்தைகளிடையே மனநிலை தொடர்பான நோய்களும் தொடர்ந்து பதிவாகி வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதற்கிடையில், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, யுனிசெஃப், கல்வி அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு ஆகியவை இணைந்து பாடசாலை மாணவர்களிடையே அறிவு திறன் சம்பந்தமான போட்டியை ஏற்பாடு செய்துள்ளன.இப்போட்டியின் இறுதிச் சுற்று 25ஆம் திகதி கொழும்பில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement