• Sep 08 2024

பண்டத்தரிப்பு ஜசிந்தா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சிறுவர் சந்தை! samugammedia

Tamil nila / Sep 13th 2023, 7:09 am
image

Advertisement

பாடசாலைகளில் மாணவர்கள் எதிர்காலத்தில் நற்பிரஜைகளாகவும், கால ஓட்டத்திற்கேற்ப தம் வாழ்வியலைக் கட்டியெழுப்பக் கூடியவர்களாகவும் மாற்றங்காணும் வகையிலான வழிகாட்டல்கள் பலவும் மேற்கொள்ளப் படுகின்றன.


இதன் ஓரங்கமாக பாடசாலைகள் தோறும் சிறுவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டு மாணவருக்கு குறித்த துறையில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு நேற்று  (12.09.2023) பண்டத்தரிப்பு ஜசிந்தா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை முன்றலில் சிறுவர் சந்தை ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது.

இச்சந்தையின் ஆரம்ப நிகழ்வுகள் பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில்  வலிகாமம் வலயக் கல்வி அலுவலக விவசாய பாட ஆசிரிய ஆலோசகர் மற்றும் இலங்கை வங்கியின்  அலுவலர் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் . 



அதிகளவான மக்கள் சந்தைக்கு வருகைதந்து ஆவலுடன் பொருட்களை வாங்கிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.



உலக உணவு ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் கல்வித் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் தொழில் முனைவுடன் கூடிய பாடசாலைத் தோட்ட நிகழ்ச்சித்திட்டத்தை சிறப்பாக மேற்கொண்டு பாடசாலைத் தோட்டம் மூலமும் சிறப்பான வருமானம் பெற்றுவருவதோடு, மாணவருக்கும் விவசாயத்துறை சார்பான களநிலை பயிற்சிகழும் வழங்கப்பட்டு தமது எதிர்கால வாழ்வியலை சிறப்பாக மேற்கொள்ள பயிற்சிகழும் வழங்கப்படுதலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

பண்டத்தரிப்பு ஜசிந்தா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சிறுவர் சந்தை samugammedia பாடசாலைகளில் மாணவர்கள் எதிர்காலத்தில் நற்பிரஜைகளாகவும், கால ஓட்டத்திற்கேற்ப தம் வாழ்வியலைக் கட்டியெழுப்பக் கூடியவர்களாகவும் மாற்றங்காணும் வகையிலான வழிகாட்டல்கள் பலவும் மேற்கொள்ளப் படுகின்றன.இதன் ஓரங்கமாக பாடசாலைகள் தோறும் சிறுவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டு மாணவருக்கு குறித்த துறையில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.இதனைக் கருத்தில் கொண்டு நேற்று  (12.09.2023) பண்டத்தரிப்பு ஜசிந்தா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை முன்றலில் சிறுவர் சந்தை ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது.இச்சந்தையின் ஆரம்ப நிகழ்வுகள் பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில்  வலிகாமம் வலயக் கல்வி அலுவலக விவசாய பாட ஆசிரிய ஆலோசகர் மற்றும் இலங்கை வங்கியின்  அலுவலர் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் . அதிகளவான மக்கள் சந்தைக்கு வருகைதந்து ஆவலுடன் பொருட்களை வாங்கிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.உலக உணவு ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் கல்வித் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் தொழில் முனைவுடன் கூடிய பாடசாலைத் தோட்ட நிகழ்ச்சித்திட்டத்தை சிறப்பாக மேற்கொண்டு பாடசாலைத் தோட்டம் மூலமும் சிறப்பான வருமானம் பெற்றுவருவதோடு, மாணவருக்கும் விவசாயத்துறை சார்பான களநிலை பயிற்சிகழும் வழங்கப்பட்டு தமது எதிர்கால வாழ்வியலை சிறப்பாக மேற்கொள்ள பயிற்சிகழும் வழங்கப்படுதலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement