• Feb 11 2025

யாழில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனாவால் உதவித் திட்டம் வழங்கிவைப்பு..!

Sharmi / Feb 10th 2025, 11:35 am
image

சீனாவின் "சகோதர பாசம்" நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள், இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய்யினால் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்றையதினம்(09) நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் பிரதீபன் மற்றும் சீன தூதரகத்தின் உயரதிகாரிகள் பிரதேச செயலகர்கள் துறைசார் அதிகாரிகள் என கலந்து கொண்டனர்.

இதன்போது 1070 குடும்பங்களுக்கு தலா 6490 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






யாழில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனாவால் உதவித் திட்டம் வழங்கிவைப்பு. சீனாவின் "சகோதர பாசம்" நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள், இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய்யினால் வழங்கி வைக்கப்பட்டது.யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்றையதினம்(09) நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் பிரதீபன் மற்றும் சீன தூதரகத்தின் உயரதிகாரிகள் பிரதேச செயலகர்கள் துறைசார் அதிகாரிகள் என கலந்து கொண்டனர்.இதன்போது 1070 குடும்பங்களுக்கு தலா 6490 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement