• May 05 2024

இலங்கையில் சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவ தயாராகும் சீன நிறுவனங்கள்..! samugammedia

Chithra / Oct 20th 2023, 1:43 pm
image

Advertisement

 

காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவும் இலங்கையின் யோசனைக்கமைய, அதன் கற்பித்தல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளுக்கான ஒத்துழைப்புக்களை வழங்க சீன நிறுவனங்கள் பலவற்றின் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சீனாவின் சுற்றாடல் பல்கலைக்கழகம், காலநிலை தொடர்பிலான முகவர் நிலையங்கள் பலவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (19) பீஜிங் நகரில் நடைபெற்றது.

இதன்போது, காலநிலை மாற்றம் தொடர்பிலான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவும் இலங்கையின் யோசனை மிகவும் காலோசிதமானதாகவும் தூரநோக்குடையதாகவும் காணப்படுகிறது என்று பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் பங்குதாரர்கள் பலருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதாகவும், அது இலங்கையின் தனி முயற்சியாக மாத்திரமின்றி கூட்டு முயற்சியாக செயற்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அதற்காக மேற்படி பல்கலைக்கழகம் தொடர்பில் ஏனைய பங்குதாரர்களுடன் நிகழ்நிலை மூலம், பல சுற்று பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவ தயாராகும் சீன நிறுவனங்கள். samugammedia  காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவும் இலங்கையின் யோசனைக்கமைய, அதன் கற்பித்தல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளுக்கான ஒத்துழைப்புக்களை வழங்க சீன நிறுவனங்கள் பலவற்றின் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சீனாவின் சுற்றாடல் பல்கலைக்கழகம், காலநிலை தொடர்பிலான முகவர் நிலையங்கள் பலவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (19) பீஜிங் நகரில் நடைபெற்றது.இதன்போது, காலநிலை மாற்றம் தொடர்பிலான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவும் இலங்கையின் யோசனை மிகவும் காலோசிதமானதாகவும் தூரநோக்குடையதாகவும் காணப்படுகிறது என்று பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.இது தொடர்பில் பங்குதாரர்கள் பலருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதாகவும், அது இலங்கையின் தனி முயற்சியாக மாத்திரமின்றி கூட்டு முயற்சியாக செயற்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.அதற்காக மேற்படி பல்கலைக்கழகம் தொடர்பில் ஏனைய பங்குதாரர்களுடன் நிகழ்நிலை மூலம், பல சுற்று பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement