• Sep 08 2024

உள்ளூராட்சி நிறுவனங்களில் நியமிக்கப்படுவோர் தொடர்பில் குளறுபடி - மஹிந்தானந்த அழுத்கமகே...!

Anaath / Jul 10th 2024, 2:17 pm
image

Advertisement

உள்ளூராட்சி நிறுவனங்களில்  நியமிக்கப்படுவோர் தொடர்பில்  குளறுபடிகள்  இடம்பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர்  மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்று (10)  பாராளுமன்ற  அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

உள்ளூராட்சி நிறுவனமானது மக்களுக்கு நெருக்கமான நிறுவனமாக அமைந்து கொண்டிருக்கிறது. பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க கூடிய ஒரு நிறுவனமாக அமைந்து கொண்டிருக்கிறது. எனவே வெள்ளம் வந்தால் வீதிகள் பழுதடைகின்றது. குறித்த நபருக்கு இந்த பிரச்சினைகள் தொடர்பில் சொல்வதன் மூலமாக இந்த பிரச்சினை தீர்க்கப்படுகின்றது.  இருக்கின்றபோதும்  அது மிகவும் தாமதமாக தான் நிறைவேற்றப்படுகிறது. எனவே அனைத்து ஆளுநர்களும் முறைப்பாடுகள் பெற்று அவர்களினுடைய இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. என தெரிவித்துள்ளார்.


இதே வேளை கருத் து வெளியிட்ட தாயாஸ்ரீ ஜெயசேகர, அமைச்சர் நல்லதொரு விடயம் தான் சொல்கின்றார். நான் அதனை ஏற்றுக்கொள்கின்றேன். அது எங்களுக்கு தெரியும். ஆனால் மாகாண சபை உள்ளூராட்சி எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சென்றுகொண்டு இருக்கின்றது.  பிரச்சினை  இருப்பது உள்ளூராட்சி தேர்தலின் முழு அதிகாரமும் தேர்ததல்கள் ஆணைக்குழுவுக்கு தான் இருக்கின்றது. இவ்வாறு தேர்தலில் போட்டியிடுபவர்களாம் இதன் மூலம் நியமிக்க வேண்டாம். இதன் மூலம் அதனை மூடிவிட வேண்டுமா என்பதுதான் அந்த பிரச்சினை. என அவர் தெரிவித்துள்ளார் . 


இதற்கு பதிலளித்த மகிந்தானந்த அழுத்தகமே ஆளுநருக்கு சட்ட மூலத்தின் மூலமாக, அதிகாரத்தின் மூலமாக நாங்கள் அதனை நிறைவேற்றியிருக்கின்றோம். நியமனங்கள் தவறாக இருப்பதால் நீங்கள் பிரதேச சபையினுடைய நீதிமன்றத்துக்கு செல்லுங்கள்.  இந்த சட்ட மூலத்தின் மூலமாக ஆளுநருக்கு ஒரு அதிகாரம் இருக்கின்றது. கிராமத்தில் பல சேதங்கள் இருக்கின்றது. பல பழுது பார்க்கும் விடயங்கள் இருக்கின்றது. எனவே ஆளுநரின் மூலமாக, என்னுடைய பிரதிநிதியாக அந்த செயலாளர் நியமிக்கப்பட்டிருக்கின்றார். 


நீங்கள் உள்ளூராட்சி செயலாளர் நியமிப்பது தவறு என்று சொல்கின்றீர்கள். முஜிபுர் ரகுமான் நியமித்திருக்கின்றார். அவர் ஒரு உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளராக இருக்கின்றார். உங்களுடைய அந்த சட்டம் சரியானது. அதே போல  சஜித் பிரேமதாசா அவ்வாறு செய்வது சரியானதா? 

டயானா அவர்கள் நீக்கப்பட்டால் தேசியப்பட்டியலிலிருந்து வேறொரு நபரை நியமிக்க வேண்டும் அவ்வாறு செய்யாமல்  விட்டு கொளும்பு மாவட்டத்தில் வேறு ஒரு வேட்பாளரை நியமிக்கின்றார்கள். அவ்வாறு செய்யும் போது தேர்தல் ஆணைக்குழு நல்லதாக இருக்கின்றது. இப்பொழுது நாங்கள் செய்யும் போது தவறாக இருக்கின்றது. 


உள்ளூராட்சி நிறுவனம் என்பது கிராமிய மக்களது பிரச்சினைகளை தீர்க்க கூடிய இடமாக இருக்க வேண்டும். மக்களினுடைய கஷ்டங்களை அறிந்த ஒருவர் அங்கே இருக்க வேண்டும். எனவே இந்த சட்டத்தின் அடிப்படையில் ஆளுநருக்கு அந்த செயலாளரை நியமிக்க முடியும். அவ்வாறு நியமித்திருக்கின்றார்.  தேர்தல் ஆணைக்குழுவுக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணைக்குழுவுக்கு முடியாத கட்சிகளுக்கு தேவையான இந்த அமைப்பில் இந்த நிஜமனங்களை செய்வதற்கு இவ்வாறு ஆணைக்குழுக்களை நியமித்து நியமித்து நாங்கள் கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களில் நியமிக்கப்படுவோர் தொடர்பில் குளறுபடி - மஹிந்தானந்த அழுத்கமகே. உள்ளூராட்சி நிறுவனங்களில்  நியமிக்கப்படுவோர் தொடர்பில்  குளறுபடிகள்  இடம்பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர்  மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.இன்று (10)  பாராளுமன்ற  அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி நிறுவனமானது மக்களுக்கு நெருக்கமான நிறுவனமாக அமைந்து கொண்டிருக்கிறது. பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க கூடிய ஒரு நிறுவனமாக அமைந்து கொண்டிருக்கிறது. எனவே வெள்ளம் வந்தால் வீதிகள் பழுதடைகின்றது. குறித்த நபருக்கு இந்த பிரச்சினைகள் தொடர்பில் சொல்வதன் மூலமாக இந்த பிரச்சினை தீர்க்கப்படுகின்றது.  இருக்கின்றபோதும்  அது மிகவும் தாமதமாக தான் நிறைவேற்றப்படுகிறது. எனவே அனைத்து ஆளுநர்களும் முறைப்பாடுகள் பெற்று அவர்களினுடைய இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. என தெரிவித்துள்ளார்.இதே வேளை கருத் து வெளியிட்ட தாயாஸ்ரீ ஜெயசேகர, அமைச்சர் நல்லதொரு விடயம் தான் சொல்கின்றார். நான் அதனை ஏற்றுக்கொள்கின்றேன். அது எங்களுக்கு தெரியும். ஆனால் மாகாண சபை உள்ளூராட்சி எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சென்றுகொண்டு இருக்கின்றது.  பிரச்சினை  இருப்பது உள்ளூராட்சி தேர்தலின் முழு அதிகாரமும் தேர்ததல்கள் ஆணைக்குழுவுக்கு தான் இருக்கின்றது. இவ்வாறு தேர்தலில் போட்டியிடுபவர்களாம் இதன் மூலம் நியமிக்க வேண்டாம். இதன் மூலம் அதனை மூடிவிட வேண்டுமா என்பதுதான் அந்த பிரச்சினை. என அவர் தெரிவித்துள்ளார் . இதற்கு பதிலளித்த மகிந்தானந்த அழுத்தகமே ஆளுநருக்கு சட்ட மூலத்தின் மூலமாக, அதிகாரத்தின் மூலமாக நாங்கள் அதனை நிறைவேற்றியிருக்கின்றோம். நியமனங்கள் தவறாக இருப்பதால் நீங்கள் பிரதேச சபையினுடைய நீதிமன்றத்துக்கு செல்லுங்கள்.  இந்த சட்ட மூலத்தின் மூலமாக ஆளுநருக்கு ஒரு அதிகாரம் இருக்கின்றது. கிராமத்தில் பல சேதங்கள் இருக்கின்றது. பல பழுது பார்க்கும் விடயங்கள் இருக்கின்றது. எனவே ஆளுநரின் மூலமாக, என்னுடைய பிரதிநிதியாக அந்த செயலாளர் நியமிக்கப்பட்டிருக்கின்றார். நீங்கள் உள்ளூராட்சி செயலாளர் நியமிப்பது தவறு என்று சொல்கின்றீர்கள். முஜிபுர் ரகுமான் நியமித்திருக்கின்றார். அவர் ஒரு உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளராக இருக்கின்றார். உங்களுடைய அந்த சட்டம் சரியானது. அதே போல  சஜித் பிரேமதாசா அவ்வாறு செய்வது சரியானதா டயானா அவர்கள் நீக்கப்பட்டால் தேசியப்பட்டியலிலிருந்து வேறொரு நபரை நியமிக்க வேண்டும் அவ்வாறு செய்யாமல்  விட்டு கொளும்பு மாவட்டத்தில் வேறு ஒரு வேட்பாளரை நியமிக்கின்றார்கள். அவ்வாறு செய்யும் போது தேர்தல் ஆணைக்குழு நல்லதாக இருக்கின்றது. இப்பொழுது நாங்கள் செய்யும் போது தவறாக இருக்கின்றது. உள்ளூராட்சி நிறுவனம் என்பது கிராமிய மக்களது பிரச்சினைகளை தீர்க்க கூடிய இடமாக இருக்க வேண்டும். மக்களினுடைய கஷ்டங்களை அறிந்த ஒருவர் அங்கே இருக்க வேண்டும். எனவே இந்த சட்டத்தின் அடிப்படையில் ஆளுநருக்கு அந்த செயலாளரை நியமிக்க முடியும். அவ்வாறு நியமித்திருக்கின்றார்.  தேர்தல் ஆணைக்குழுவுக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணைக்குழுவுக்கு முடியாத கட்சிகளுக்கு தேவையான இந்த அமைப்பில் இந்த நிஜமனங்களை செய்வதற்கு இவ்வாறு ஆணைக்குழுக்களை நியமித்து நியமித்து நாங்கள் கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement