பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் உடன் இணைந்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் நடத்திய உலக சாதனை படைக்கும் முயற்சியில், கம்பஹா மாவட்டத்தின் ஹுனுபிடிய பகுதியில் வசித்துவரும் மொஹமட் ஷபான் மற்றும் பாத்திமா இபாஸா ஆகியோரின் மகன் 3 வயதான மொஹமட் ஷம்லான்.
அந்தவகையில், இவர் எண்கள்,பூக்கள், பழங்கள், பறவைகள், விலங்குகள், தானியங்கள், மரக்கறி வகைகள்,மனித உடலின் உள் உறுப்புகள்,,ஊர்வன, பூச்சிகள் பூக்கள், மீன்கள், சிங்கள, ஆங்கில, அரேபிய மொழி எழுத்துகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு தொழில்கள்,உலகப் புகழ் பெற்ற கோபுரங்கள், புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள், தேசிய வீரர்கள்,உணவு வகைகள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் என 1098 உருவப் படங்களை அடையாளம் காட்டி அவற்றின் பெயர்களை மனப்பாடமாகக் கூறி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்தார்.
இதன் மூலம் 3 வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட குழந்தை என்ற பெயரைப் பெற்றுள்ளார் குழந்தை ஷம்லான்.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்றது. இதன் போது நடுவர்களாக இருந்து குழந்தையை முறையாகப் பரிசீலனை செய்து உலக சாதனையாகப் பதிவு செய்தார்கள் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா மற்றும் கண்டி மாவட்டத்தின் துணைத் தலைவர் சந்திரமோகன் போன்றோர். சோழன் உலக சாதனை படைத்த குழந்தை ஷம்லானுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம்,நினைவுக் கேடயம் மற்றும் அடையாள அட்டை போன்றவை நடுவர்கள் வழங்கிப் பாராட்டினார்கள்.
மேலும் இந்த சோழன் உலக சாதனை நிகழ்வில் கெலனிய பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சுனில் ஷாந்த மற்றும் கம்பஹா மாவட்ட ஜமியதுல் உலமா அல் ஹாஜ் நுஹூமான் இனாமி போன்றோர் பங்கு கொண்டு உலக சாதனை படைத்த குழந்தையின் பெற்றோரை வாழ்த்திப் பாராட்டினார்கள்.
சோழன் உலக சாதனை படைத்த 3 வயது குழந்தை- குவியும் வாழ்த்துக்கள் பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் உடன் இணைந்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் நடத்திய உலக சாதனை படைக்கும் முயற்சியில், கம்பஹா மாவட்டத்தின் ஹுனுபிடிய பகுதியில் வசித்துவரும் மொஹமட் ஷபான் மற்றும் பாத்திமா இபாஸா ஆகியோரின் மகன் 3 வயதான மொஹமட் ஷம்லான்.அந்தவகையில், இவர் எண்கள்,பூக்கள், பழங்கள், பறவைகள், விலங்குகள், தானியங்கள், மரக்கறி வகைகள்,மனித உடலின் உள் உறுப்புகள்,,ஊர்வன, பூச்சிகள் பூக்கள், மீன்கள், சிங்கள, ஆங்கில, அரேபிய மொழி எழுத்துகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு தொழில்கள்,உலகப் புகழ் பெற்ற கோபுரங்கள், புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள், தேசிய வீரர்கள்,உணவு வகைகள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் என 1098 உருவப் படங்களை அடையாளம் காட்டி அவற்றின் பெயர்களை மனப்பாடமாகக் கூறி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்தார்.இதன் மூலம் 3 வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட குழந்தை என்ற பெயரைப் பெற்றுள்ளார் குழந்தை ஷம்லான்.அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்றது. இதன் போது நடுவர்களாக இருந்து குழந்தையை முறையாகப் பரிசீலனை செய்து உலக சாதனையாகப் பதிவு செய்தார்கள் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா மற்றும் கண்டி மாவட்டத்தின் துணைத் தலைவர் சந்திரமோகன் போன்றோர். சோழன் உலக சாதனை படைத்த குழந்தை ஷம்லானுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம்,நினைவுக் கேடயம் மற்றும் அடையாள அட்டை போன்றவை நடுவர்கள் வழங்கிப் பாராட்டினார்கள். மேலும் இந்த சோழன் உலக சாதனை நிகழ்வில் கெலனிய பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சுனில் ஷாந்த மற்றும் கம்பஹா மாவட்ட ஜமியதுல் உலமா அல் ஹாஜ் நுஹூமான் இனாமி போன்றோர் பங்கு கொண்டு உலக சாதனை படைத்த குழந்தையின் பெற்றோரை வாழ்த்திப் பாராட்டினார்கள்.