எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை தோற்கடிக்கும் முயற்சி இடம்பெற்றுவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடியாளர்கள் ஒன்றிணைந்து விஸா மோசடியை மேற்கொண்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரே இந்த மோசடி தொடர்பில் பாராளுமன்றத்தில் முதலில் சுட்டிக்காட்டி பேசியிருந்தார். இந்த விஸா மோசடி மத்திய வங்கி மோசடி போன்ற பல மடங்கு மோசடியாகும்.
இதற்கு இந்த அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி ஊழல் மோசடிகளை கண்டு டீல் செய்து மௌனித்திருக்கும் கட்சியல்ல. உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு மதிப்பளிக்கிறோம். இன்று சம்பிரதாய எதிர்க்கட்சி இல்லை. டீல் எம்மிடம் இல்லை. சஜித்பிரேமதாசவிடம் டீல் இல்லை.
விஸா மோசடி, பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி எந்த ஒரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. வழக்கு தொடுக்கவில்லை.
ஆகவே, பொதுமக்கள் சிந்தித்து டீல் அற்ற தரப்பினரை தெரிவு செய்ய வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியினர் கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஆனால் நடவடிக்கைகளை எடுத்ததாக தெரியவில்லை.
அரச புலனாய்வு அறிக்கைகள் அடங்கலாக சகல கருத்துக் கணிப்புகளிலும் சஜித் பிரேமதாஸவே முன்னிலையில் இருப்பதாக வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆகவேதான் சகல தரப்புகளும் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாஸவை தோற்கடிக்க பாடுபட்டு வருகின்றனர்.
மக்கள் ஆணையால் சஜித் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை தோற்கடிக்க சதி- நளின் பண்டார குற்றச்சாட்டு. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை தோற்கடிக்கும் முயற்சி இடம்பெற்றுவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.கொழும்பில் நேற்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மத்திய வங்கி பிணைமுறி மோசடியாளர்கள் ஒன்றிணைந்து விஸா மோசடியை மேற்கொண்டுள்ளனர்.எதிர்க்கட்சித் தலைவரே இந்த மோசடி தொடர்பில் பாராளுமன்றத்தில் முதலில் சுட்டிக்காட்டி பேசியிருந்தார். இந்த விஸா மோசடி மத்திய வங்கி மோசடி போன்ற பல மடங்கு மோசடியாகும். இதற்கு இந்த அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.ஐக்கிய மக்கள் சக்தி ஊழல் மோசடிகளை கண்டு டீல் செய்து மௌனித்திருக்கும் கட்சியல்ல. உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு மதிப்பளிக்கிறோம். இன்று சம்பிரதாய எதிர்க்கட்சி இல்லை. டீல் எம்மிடம் இல்லை. சஜித்பிரேமதாசவிடம் டீல் இல்லை. விஸா மோசடி, பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி எந்த ஒரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. வழக்கு தொடுக்கவில்லை.ஆகவே, பொதுமக்கள் சிந்தித்து டீல் அற்ற தரப்பினரை தெரிவு செய்ய வேண்டும். தேசிய மக்கள் சக்தியினர் கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஆனால் நடவடிக்கைகளை எடுத்ததாக தெரியவில்லை.அரச புலனாய்வு அறிக்கைகள் அடங்கலாக சகல கருத்துக் கணிப்புகளிலும் சஜித் பிரேமதாஸவே முன்னிலையில் இருப்பதாக வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகவேதான் சகல தரப்புகளும் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாஸவை தோற்கடிக்க பாடுபட்டு வருகின்றனர். மக்கள் ஆணையால் சஜித் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் எனவும் தெரிவித்தார்.