தென்னிந்திய நடிகை ஜனனி ஐயர் தன்னுடைய பெயரில் இருந்த ஐயர் என்ற வார்த்தையை நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தன்னை ஜனனி என்று அனைவரும் அழைக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்.
நடிகை ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வேழம் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிலையில் குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஜனனி ஐயர்இ தான் நடிக்கும் திரைப்படங்களின் தலைப்பு தெகிடி, வேழம் என வித்தியாசமாகவே இருக்கின்றன.
இது குறித்து பலர் தன்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அது எதற்காக அமைகிறது என தெரிவித்தார். மேலும் நல்ல திரைப்படங்களை ஆதரிக்க இங்கு (தமிழ் சினிமாவில்) ஆட்கள் குறைவாகவே இருக்கின்றனர்.
அப்படிப்பட்ட வேழம் என்ற நல்ல திரைப்படத்தை எஸ்.பி சினிமா சார்பில் கிஷோர் வெளியிட முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
அதேவேளை தன்னுடைய பெயரில் இருந்த ஐயர் என்ற வார்த்தையை நீக்க விட்டதாகவும் தெரிவித்தார்.
பிற செய்திகள்
கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)
சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்
விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)
Facebook: https://www.facebook.com/samugamweb
Instagram: https://www.instagram.com/samugammedia/
Twitter: https://twitter.com/samugammedia