• Jan 13 2025

படைப்புழு தாக்கத்தால் சோள பயிர்ச்செய்கை பாதிப்பு - பெரும் நஷ்டத்தில் செய்கையாளர்கள்

Chithra / Jan 5th 2025, 8:10 am
image


 

படைப்புழுவின் தாக்கம் காரணமாக சோளச் செய்கையாளர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் பல ஏக்கரில் சோள பயிர்ச்செய்கை மேற்கொள்ளபட்டு வருகின்றது.

இந்த நிலையில் படைப்புழுவின் தாக்கம் காரணமாக சோளச் செய்கையாளர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.


கிண்ணியா பிரதேசத்தில் கற்குழி, வட்டமடு, பனிச்சங்குளம், குரங்குபாஞ்சான் மற்றும் வான் எல போன்ற பல பகுதிகளிலும் தற்போது சோள அறுவடை இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் படைப்புழு இனத்தின் தாக்கம் அதிகரிப்பதால் விளைச்சல் குறைந்து காணப்படுவதாகவும், இதனால் பாரிய நஷ்டத்தை தாம் எதிர்நோக்கியுள்ளதாகவும் சோளப் பயிர்ச்செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


அத்தோடு பல இலட்சம் ரூபா செலவு செய்து, சோளச் செய்கை மேற்கொண்டிருந்த போதும், உரிய விளைச்சல் கிடைக்கவில்லை, படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் பயிர்ச்செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


படைப்புழு தாக்கத்தால் சோள பயிர்ச்செய்கை பாதிப்பு - பெரும் நஷ்டத்தில் செய்கையாளர்கள்  படைப்புழுவின் தாக்கம் காரணமாக சோளச் செய்கையாளர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக கவலை தெரிவித்துள்ளனர்.திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் பல ஏக்கரில் சோள பயிர்ச்செய்கை மேற்கொள்ளபட்டு வருகின்றது.இந்த நிலையில் படைப்புழுவின் தாக்கம் காரணமாக சோளச் செய்கையாளர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.கிண்ணியா பிரதேசத்தில் கற்குழி, வட்டமடு, பனிச்சங்குளம், குரங்குபாஞ்சான் மற்றும் வான் எல போன்ற பல பகுதிகளிலும் தற்போது சோள அறுவடை இடம்பெற்று வருகிறது.இந்நிலையில் படைப்புழு இனத்தின் தாக்கம் அதிகரிப்பதால் விளைச்சல் குறைந்து காணப்படுவதாகவும், இதனால் பாரிய நஷ்டத்தை தாம் எதிர்நோக்கியுள்ளதாகவும் சோளப் பயிர்ச்செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.அத்தோடு பல இலட்சம் ரூபா செலவு செய்து, சோளச் செய்கை மேற்கொண்டிருந்த போதும், உரிய விளைச்சல் கிடைக்கவில்லை, படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் பயிர்ச்செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement