• Nov 10 2024

உடல் ரீதியான தண்டனைகளுக்குத் தடை! இலங்கைச் சட்டத்தில் அதிரடித் திருத்தம்

Chithra / Sep 15th 2024, 8:43 am
image

 

உடல் ரீதியான தண்டனைகளைத் தடை செய்வதற்கான குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எந்தவொரு முறையிலும் உடல் ரீதியிலான தண்டனையை தடை செய்யும் வகையில், தண்டனைச் சட்டம் திருத்தப்பட்டு, 

அதற்கு உரிய சட்டத்தை உருவாக்குவதற்காக கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்படி, வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது.

சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அதனை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உடல் ரீதியான தண்டனைகளுக்குத் தடை இலங்கைச் சட்டத்தில் அதிரடித் திருத்தம்  உடல் ரீதியான தண்டனைகளைத் தடை செய்வதற்கான குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.எந்தவொரு முறையிலும் உடல் ரீதியிலான தண்டனையை தடை செய்யும் வகையில், தண்டனைச் சட்டம் திருத்தப்பட்டு, அதற்கு உரிய சட்டத்தை உருவாக்குவதற்காக கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதன்படி, வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது.சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அதனை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement