• Sep 08 2024

சுகாதார சீர்கேடான உணவகத்திற்கு 05 வருட விசாரணையின் பின் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு! samugammedia

Tamil nila / Nov 15th 2023, 6:47 pm
image

Advertisement

ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்திற்கு எதிராக 2018ம் ஆண்டு, அச்சமயத்தில் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றிய தி.கிருபன் அவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சுகாதார சீர்கேடு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் குறித்த வழக்கு மேவதிக நீதவான் நீதிவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அச்சமயத்தில் உணவக உரிமையாளர் குற்றத்தை ஏற்காத நிலையில் வழக்கானது நீதிமன்றில் தொடர் விசாரணைக்காக நியமிக்கப்பட்டு விசாரணை கடந்த 05 வருடங்களாக நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் வழக்கு விசாரணைகள் நிறேவடைந்த நிலையில் இன்று  புதன்கிழமை  தீர்ப்புக்காக வழக்கு திகதி இடப்பட்டு இருந்தது.

இந் நிலையில் வழக்கின் தீர்ப்பை வழங்கிய மேலதிக நீதவான், இதுவரை நடைபெற்ற விசாரணைகளின் அடிப்படையில் உணவக உரிமையாளர் குற்றவாளி என தீர்ப்பளித்தார். அத்துடன் உணவக உரிமையாளரிற்கு 25,000/= தண்டப்பணமும் விதிக்கப்பட்டது. 

உணவக உரிமையாளர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா அவர்கள் முன்னிலயாகி இருந்தார். வழக்கு தொடுநர் சார்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் ம. இராஜமேனன், மற்றும் சூ. குணசாந்தன் ஆகியோர் வழக்கினை நெறிப்படுத்தி இருந்தனர்.

சுகாதார சீர்கேடான உணவகத்திற்கு 05 வருட விசாரணையின் பின் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு samugammedia ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்திற்கு எதிராக 2018ம் ஆண்டு, அச்சமயத்தில் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றிய தி.கிருபன் அவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சுகாதார சீர்கேடு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் குறித்த வழக்கு மேவதிக நீதவான் நீதிவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அச்சமயத்தில் உணவக உரிமையாளர் குற்றத்தை ஏற்காத நிலையில் வழக்கானது நீதிமன்றில் தொடர் விசாரணைக்காக நியமிக்கப்பட்டு விசாரணை கடந்த 05 வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணைகள் நிறேவடைந்த நிலையில் இன்று  புதன்கிழமை  தீர்ப்புக்காக வழக்கு திகதி இடப்பட்டு இருந்தது.இந் நிலையில் வழக்கின் தீர்ப்பை வழங்கிய மேலதிக நீதவான், இதுவரை நடைபெற்ற விசாரணைகளின் அடிப்படையில் உணவக உரிமையாளர் குற்றவாளி என தீர்ப்பளித்தார். அத்துடன் உணவக உரிமையாளரிற்கு 25,000/= தண்டப்பணமும் விதிக்கப்பட்டது. உணவக உரிமையாளர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா அவர்கள் முன்னிலயாகி இருந்தார். வழக்கு தொடுநர் சார்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் ம. இராஜமேனன், மற்றும் சூ. குணசாந்தன் ஆகியோர் வழக்கினை நெறிப்படுத்தி இருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement