• Jul 27 2024

முட்டையை நிமிர்த்திய நியூட்டன், நாட்டை நிமிர்த்திய ரணில் - புகழ்ந்து தள்ளிய முசாரஃப் எம்பி...!samugammedia

Tharun / Nov 15th 2023, 6:51 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்க நேற்று முன்தினம் முன்வைத்துள்ள வரவு செலவுத்திட்டம்  குறித்து விஞ்ஞானி நியூட்டனை எடுகோள் காட்டி ஜனாதிபதி அவர்களின்  வரவு செலவுத்திட்டதை ஆதரித்து அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் S.M.M.முஷாரப் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

வலுவான எதிர்காலத்துக்கான முன்னுரை என்னும் கருப்பொருளில் ஜனாதிபதி அவர்கள் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து இருந்தார். இதற்கு பின்னரான நிலைமையை பார்த்தால், எதிர்க்கட்சியினர் இன்றைய சூழலில் இதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. என்று கூறுகிறார்கள் அத்துடன் எந்த பட்ஜெட் எதிர்கால தேர்தலை இலக்காக கொண்டது என்று கூறுகிறார்கள். இதன் கருது யாதெனில் பட்ஜெட்டில் நல்ல விடயங்கள் இருப்பதே ஆகும். மக்களை கவரக்கூடிய விடயங்கள் உள்ளன. இதனால் மக்கள் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என அவர்கள் பயப்பிடுகிறார்கள் 

முக்கியமாக சொல்வதென்றால் கடந்த ஆண்டு நிலைமைகளிலிருந்து நாங்கள் மீண்டு வந்திருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் ஜனாதிபதியே ஆவார். எதிர்கட்சியினர் பொறுப்புக்களை எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல பல தேவைற்ற கருத்துக்களை கூறி இந்நாட்டை குழப்பியவர்கள். எனவே ஜனாதிபதியை பற்றியோ அவரின் பட்ஜெட் பற்றியோ கூறுவதற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை.

எதிர்கட்சிகள் அரசியல் செய்யாமல் பட்ஜெட் உள்ள நல்ல விடயங்களை ஆதரித்தால் நாட்டை முன்னேற்ற முடியும். விமர்சனம்  செய்வதை நிறுத்தி விட்டு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எல்லா துறைகளையும் விருத்தி செய்வதற்கன முன்மொழிவுகள் பட்ஜெட்டில் உள்ளது. பல வேலை திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார். நாட்டின் வருமானத்தை  அதிகரிக்க ஜனாதிபதி ஓய்வின்றி செயற்படுகிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏனைய நாடுகளில் ஒரு திட்டத்தை  முன் வைக்கும் அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இலங்கையில் ஆர்ப்பாட்டமே செய்வார்கள். இதுவே இந்நாட்டின் நிலைமை ஆகும் குறை கூறிக்கொண்டு அரசியல் செய்கின்ற நிலைமைகள் இந்நாட்டில் மாற  வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார் 

முட்டையை நிமிர்த்திய நியூட்டன், நாட்டை நிமிர்த்திய ரணில் - புகழ்ந்து தள்ளிய முசாரஃப் எம்பி.samugammedia ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்க நேற்று முன்தினம் முன்வைத்துள்ள வரவு செலவுத்திட்டம்  குறித்து விஞ்ஞானி நியூட்டனை எடுகோள் காட்டி ஜனாதிபதி அவர்களின்  வரவு செலவுத்திட்டதை ஆதரித்து அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் S.M.M.முஷாரப் தனது கருத்தை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலுவான எதிர்காலத்துக்கான முன்னுரை என்னும் கருப்பொருளில் ஜனாதிபதி அவர்கள் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து இருந்தார். இதற்கு பின்னரான நிலைமையை பார்த்தால், எதிர்க்கட்சியினர் இன்றைய சூழலில் இதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. என்று கூறுகிறார்கள் அத்துடன் எந்த பட்ஜெட் எதிர்கால தேர்தலை இலக்காக கொண்டது என்று கூறுகிறார்கள். இதன் கருது யாதெனில் பட்ஜெட்டில் நல்ல விடயங்கள் இருப்பதே ஆகும். மக்களை கவரக்கூடிய விடயங்கள் உள்ளன. இதனால் மக்கள் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என அவர்கள் பயப்பிடுகிறார்கள் முக்கியமாக சொல்வதென்றால் கடந்த ஆண்டு நிலைமைகளிலிருந்து நாங்கள் மீண்டு வந்திருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் ஜனாதிபதியே ஆவார். எதிர்கட்சியினர் பொறுப்புக்களை எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல பல தேவைற்ற கருத்துக்களை கூறி இந்நாட்டை குழப்பியவர்கள். எனவே ஜனாதிபதியை பற்றியோ அவரின் பட்ஜெட் பற்றியோ கூறுவதற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை.எதிர்கட்சிகள் அரசியல் செய்யாமல் பட்ஜெட் உள்ள நல்ல விடயங்களை ஆதரித்தால் நாட்டை முன்னேற்ற முடியும். விமர்சனம்  செய்வதை நிறுத்தி விட்டு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எல்லா துறைகளையும் விருத்தி செய்வதற்கன முன்மொழிவுகள் பட்ஜெட்டில் உள்ளது. பல வேலை திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார். நாட்டின் வருமானத்தை  அதிகரிக்க ஜனாதிபதி ஓய்வின்றி செயற்படுகிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏனைய நாடுகளில் ஒரு திட்டத்தை  முன் வைக்கும் அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இலங்கையில் ஆர்ப்பாட்டமே செய்வார்கள். இதுவே இந்நாட்டின் நிலைமை ஆகும் குறை கூறிக்கொண்டு அரசியல் செய்கின்ற நிலைமைகள் இந்நாட்டில் மாற  வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார் 

Advertisement

Advertisement

Advertisement