இலங்கையர்களுக்கு கொவிட் இலத்திரனியல் அடையாளஅட்டை

496

இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெறுவோருக்கான இலத்திரனியல் அடையாள அட்டையொன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்தோடு சுகாதார அமைச்சினால் இந்த அடையாள அட்டை எதிர்வரும் காலத்தில் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அடையாளஅட்டையில் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட திகதி, அடுத்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவுள்ள திகதி, தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் இடம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: