• Mar 15 2025

தையிட்டி விகாரை தொடர்பில் ஆராய்ந்து நியாயமான முறையில் தலையிட முடியும் - அமைச்சர் ஹினிதும

Chithra / Mar 12th 2025, 9:03 am
image


யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரை தொடர்பில் நேரில் சென்று ஆராயவுள்ளதாகவும்  இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என நம்புவதாகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.

10ஆவது பாராளுமன்றத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் கூடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இனங்களுக்கிடையில் சுமுகத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொள்ளும். 

யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை அமைந்துள்ள இடத்திற்கு விஜயம் செய்து அதனைப் பார்வையிடவுள்ளேன், இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என நம்புகின்றேன் என்றார்.


தையிட்டி விகாரை தொடர்பில் ஆராய்ந்து நியாயமான முறையில் தலையிட முடியும் - அமைச்சர் ஹினிதும யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரை தொடர்பில் நேரில் சென்று ஆராயவுள்ளதாகவும்  இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என நம்புவதாகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.10ஆவது பாராளுமன்றத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் கூடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இனங்களுக்கிடையில் சுமுகத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொள்ளும். யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை அமைந்துள்ள இடத்திற்கு விஜயம் செய்து அதனைப் பார்வையிடவுள்ளேன், இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என நம்புகின்றேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now