• Apr 24 2025

பரிசுத்த பாப்பரசரின் மறைவு:யாழில் துக்கதினம் அனுஸ்டிப்பு

Sharmi / Apr 23rd 2025, 8:40 pm
image

பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் துக்க நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் நேற்றுமுன்தினம்(21) வத்திக்கானில் உள்ள காசா சாண்டா மார்ட்டாவில் உள்ள தனது இல்லத்தில் நித்திய இளைப்பாறினார்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் இன மத பேதமின்றி ஏராளமானோர் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இலங்கையில்  பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் துக்க நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

செம்பியன் பற்று வடக்கு வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலய பங்கு மக்கள் தமது திருத்தந்தையின் இழப்பின் கவலையினை வெளிப்படுத்தும் முகமாக ஆலய வாசலில் கறுப்பு கொடி கட்டி மற்றும் ஆலய முன்றலில் பாப்பரசரின் இழப்புக்கான பதாகைகள் கட்டி தமது துக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து ஆலய பங்கு மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் மறைவு, உலகவாழ் மக்கள் ஒவ்வொருவரையும் ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இவ் இழப்பினை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் தாங்கள் இப்போது ஆயன் இல்லா ஆடுகளை போல உள்ளதாகவும் அடுத்த பாப்பரசரின் தெரிவினை மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறோம் எனவும் தமது கவலையினை தெரிவித்துள்ளனர்.


பரிசுத்த பாப்பரசரின் மறைவு:யாழில் துக்கதினம் அனுஸ்டிப்பு பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் துக்க நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் நேற்றுமுன்தினம்(21) வத்திக்கானில் உள்ள காசா சாண்டா மார்ட்டாவில் உள்ள தனது இல்லத்தில் நித்திய இளைப்பாறினார்.இந்நிலையில் அவரது மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் இன மத பேதமின்றி ஏராளமானோர் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில், இலங்கையில்  பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் துக்க நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.செம்பியன் பற்று வடக்கு வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலய பங்கு மக்கள் தமது திருத்தந்தையின் இழப்பின் கவலையினை வெளிப்படுத்தும் முகமாக ஆலய வாசலில் கறுப்பு கொடி கட்டி மற்றும் ஆலய முன்றலில் பாப்பரசரின் இழப்புக்கான பதாகைகள் கட்டி தமது துக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.இது குறித்து ஆலய பங்கு மக்கள் கருத்து தெரிவிக்கையில்,கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் மறைவு, உலகவாழ் மக்கள் ஒவ்வொருவரையும் ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது.இவ் இழப்பினை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் தாங்கள் இப்போது ஆயன் இல்லா ஆடுகளை போல உள்ளதாகவும் அடுத்த பாப்பரசரின் தெரிவினை மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறோம் எனவும் தமது கவலையினை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement