• Mar 10 2025

தான நிகழ்வில் ஏற்பட்ட தகராறு - பலியான உயிர்

Chithra / Mar 9th 2025, 3:25 pm
image


வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எத்னாவல பகுதியில் தான நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலை சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வரக்காபொல - எத்னாவல பகுதியைச் சேர்ந்த  61 வயதுடையவராவார்.

உயிரிழந்தவர்  தனது சகோதரரின் வீட்டில் நடந்த ஒரு அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது, அயல்வீட்டாருடன்  ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,

சந்தேகநபரைக் கைது செய்ய வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தான நிகழ்வில் ஏற்பட்ட தகராறு - பலியான உயிர் வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எத்னாவல பகுதியில் தான நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.இந்தக் கொலை சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் வரக்காபொல - எத்னாவல பகுதியைச் சேர்ந்த  61 வயதுடையவராவார்.உயிரிழந்தவர்  தனது சகோதரரின் வீட்டில் நடந்த ஒரு அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது, அயல்வீட்டாருடன்  ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,சந்தேகநபரைக் கைது செய்ய வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement