• Mar 10 2025

பட்டப்படிப்புகளைத் தொடங்கவுள்ளவர்களுக்கு கல்வி அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பு

Chithra / Mar 9th 2025, 3:32 pm
image

 

பட்டப்படிப்புகளைத் தொடங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முறையாக விசாரிக்க வேண்டும் என கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டங்களை வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில்லை.

எனவே, பட்டப்படிப்புகளைத் தொடங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முறையாக விசாரிக்க வேண்டும்.

அத்தகைய உள்ளூர் நிறுவனத்திற்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்திற்கும் இடையே செல்லுபடியாகும் ஒப்பந்தம் உள்ளதா? என்பதைச் சரிபார்க்கவும்.

அத்துடன், வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் பொமன்வெல்த் பல்கலைக்கழக ஆண்டு புத்தகத்தில் அல்லது உலக உயர் கல்வி தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதா? என்பதையும் கண்டறிய வேண்டும்.

உள்ளூர் நிறுவனத்தில் இளங்கலைப் படிப்புகளுக்கு போதுமான வசதிகள் உள்ளதா? என்பதையும், உள்ளூர் நிறுவனம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் நேரடிப் பதிவுக்கான வசதிகளை வழங்குகிறதா? என்பதையும் உறுதி செய்து தெரிந்து கொள்ளுமாறும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் www.mohe.gov.lk இல் கிடைப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

பட்டப்படிப்புகளைத் தொடங்கவுள்ளவர்களுக்கு கல்வி அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பு  பட்டப்படிப்புகளைத் தொடங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முறையாக விசாரிக்க வேண்டும் என கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டங்களை வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில்லை.எனவே, பட்டப்படிப்புகளைத் தொடங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முறையாக விசாரிக்க வேண்டும்.அத்தகைய உள்ளூர் நிறுவனத்திற்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்திற்கும் இடையே செல்லுபடியாகும் ஒப்பந்தம் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.அத்துடன், வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் பொமன்வெல்த் பல்கலைக்கழக ஆண்டு புத்தகத்தில் அல்லது உலக உயர் கல்வி தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும்.உள்ளூர் நிறுவனத்தில் இளங்கலைப் படிப்புகளுக்கு போதுமான வசதிகள் உள்ளதா என்பதையும், உள்ளூர் நிறுவனம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் நேரடிப் பதிவுக்கான வசதிகளை வழங்குகிறதா என்பதையும் உறுதி செய்து தெரிந்து கொள்ளுமாறும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் www.mohe.gov.lk இல் கிடைப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement