போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நீதியை நிலைநாட்டும் விடயத்தில் இலங்கையின் அலட்சிய செயற்பாடுகள் ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடுமையான அவதானத்தைப் பெற்றுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கம் மற்றுமொரு உள்ள விசாரணை ஆணைக்குழுவை நியமித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பிரிவு பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்த அர்ப்பணிப்பற்ற கண்துடைப்பு நடவடிக்கையால் வெளிநாட்டு அரசாங்கங்கள் ஏமாந்துவிடாமல் உடனடியாக சர்வதேச நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இலங்கையில் ஆகக்குறைந்த பட்சம் 12 ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியிருக்கும் மீனாட்சி கங்குலி மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசத்தின் அழுத்தத்தை தணிக்கும் வகையிலேயே இவ்வாறான ஆணைக்குழுக்கள் கண்துடைப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் ஒருபோதும் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு வழிவகுக்கவில்லை.
காணாமல்போன உறவினரை தேடுவதற்கு அவர்தம் உறவினருக்கு உதவவில்லை.
அவர்கள் கண்டுபிடித்த விடயங்கள் அனேகமாக வெளிப்படுத்தப்படவில்லை. பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஐநா நிபுணர்கள் மனித உரிமைகளுக்கான ஐநா ஆணையாளர் ஆகியோர் இலங்கையின் நீதித்துறை நடைமுறையில் காணப்படும் பாரதூரமான குறைபாடுகளை அடிக்கடி சுட்டிக்காட்டியுள்ளதையும் நினைவுபடுத்தியுள்ளார்.
பிற செய்திகள்:
- வகுப்பறையில் மயக்கமுற்ற மாணவருக்கு நேர்ந்த கதி..!
- இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு தந்தையா? சிக்னல் சந்தியில் நடந்த நெகிழ்வு சம்பவம்!
- இலங்கையர்களுக்கு நற்செய்தி-வெகு விரைவில் எங்களுக்கும் தடுப்பூசி!
- “இந்த 4 கிலோ மணலும்… அப்படியே தங்கமா மாறும் பாருங்க” – கூட்டாளிகளுடன் சேர்ந்து நண்பனே ஏமாற்றிய கதை…
- சிறுமிக்கு சித்தப்பாவால் நடந்த கொடூரம்; நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு
- ஜோ பைடன் இறந்தால் தமிழ் பெண் கமலா ஹாரிஸின் நிலை மாறும்; சட்டம் சொல்லும் உண்மை!
- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ஜோ பைடன்; இப்படியும் ஒரு ஜனாதிபதியா? வியக்கும் உலக மக்கள்!
- “சசிகலாவின் தற்போதைய நிலை தொடர்பில் வெளியான தகவல்!
- திருகோணமலைக்கு சீமெந்து ஏறிச்ச சென்ற கப்பல் திடீர் விபத்து!
- தாயின் கை தவறியதால் பறிபோன குழந்தை!
- இலங்கை தமிழ் ஊடகங்களில் திடீரென பதவி விலகிய பிரபலங்கள்-மர்மம் என்ன?
- தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் பாடசாலை மாணவர்கள்!
- பதுளை-வலப்பனை நிலநடுக்கம் தொடர்பில் வெளியான செய்தி!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்