• May 10 2025

நாட்டில் உயரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை - ஏழு பேர் மரணம்

Chithra / May 9th 2025, 1:50 pm
image

  

நாடு முழுவதும்  நடப்பாண்டில் இதுவரை 19,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு பரவல் பெருமளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், அப்பகுதியில் உள்ள பல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு பாதிப்புகளைப் பதிவு செய்து வருகின்றன.

இதையடுத்து, அதிக ஆபத்துள்ள பிரிவுகளை இலக்காகக் கொண்டு,  நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுதல், பொது விழிப்புணர்வு மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பிரசாரம் மே 19 முதல் மே 24 வரை நடைபெறும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டில் உயரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை - ஏழு பேர் மரணம்   நாடு முழுவதும்  நடப்பாண்டில் இதுவரை 19,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு பரவல் பெருமளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், அப்பகுதியில் உள்ள பல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு பாதிப்புகளைப் பதிவு செய்து வருகின்றன.இதையடுத்து, அதிக ஆபத்துள்ள பிரிவுகளை இலக்காகக் கொண்டு,  நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுதல், பொது விழிப்புணர்வு மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பிரசாரம் மே 19 முதல் மே 24 வரை நடைபெறும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement